tamilnadu

img

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு வெறும் ரூ.10 ஆயிரம் மட்டும் ஒதுக்கி துரோகம் மத்திய அரசு மீது சு.வெங்கடேசன் எம்.பி., குற்றச்சாட்டு

மதுரை, பிப்.9- மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தின் ரயில்வே திட்டங்களுக்கு வெறும் ரூ.10,000 மட்டும் ஒதுக்கி தமிழக மக்க ளின் மீதுள்ள “அன்பை” மோடி வெளிப் படுத்தியுள்ளார் என மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறினார். ஞாயிறன்று அவர் மதுரையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:- கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மத்திய ரயில்வே பட்ஜெட்டில்  தமிழ கத்தின் புதிய திட்டங்களின் மதிப்பு சுமார் 12 ஆயிரம் கோடி. அந்தத் திட்டங் களுக்கு இந்த பட்ஜெட்டில் வெறும் பத்தாயிரம் ரூபாய் மட்டுமே ஒதுக்கப் பட்டுள்ளது. இது அநீதியின் உச்சம். தமிழக மக்களின் ‘அன்புக்கு’ அவர் அளித்துள்ள பரிசு இதுதான்.  ஆனால் உத்தரப்பிரதேசத்தை மையமாக வைத்து செயல்படும் வடக்கு ரயில்வேயில் புதிய திட்டங்கள் செயல் படுத்த ஒதுக்கப்பட்டுள்ள தொகை சுமார் ரூ. 7ஆயிரம் கோடி. இந்தியாவிலே  ஜிஎஸ்டி அதிகம் செலுத்தும் மாநிலங்களில், முதல் நிலை பட்டியலில்  தமிழகம் உள்ளது. அப்படி இருக்கையில் ரயில்வே திட்டங் களுக்கு நிதி ஒதுக்காதது தமிழக மக்களை வஞ்சிக்கும் செயலாகும். துரோகத்தின் உச்சம் இது.  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ரயில்வே தொடர்பான கோரிக்கைகளில் தலையிட்டு கூடுதல் நிதி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மக்களும் ஓரணியில் திரண்டு கோரிக்கைகளை வலியுறுத்த வேண்டும். மத்திய அரசின் துரோகத் திற்கு எதிராக வினையாற்றவேண்டும்.

திட்ட விவரங்கள்
திண்டிவனம்-செஞ்சி-திருவண்ணாமலை- 70கி.மீ.-  ரூ.900கோடி அத்திப்பட்டு-புத்தூர் (2008-09) 88 கி.மீ. - ரூ. 1,150கோடி ஈரோடு-பழனி (2008-09) 91 கி.மீ - ரூ. 1140 கோடி சென்னை-மாயவரம்-கடலூர்  (2008-09) 179 கி.மீ.- ரூ.2,300கோடி; மதுரை-அருப்புக்கோட்டை-தூத்துக்குடி(2011-12)143 கி.மீ.- ரூ. 1,800 கோடி கூடுவாஞ்சேரி-திருப்பெரும்புதூர்-கிருங்காகோட்டை-ஆவடி- (2013-14) 60 கிமீ- ரூ. 1,500 கோடி மொரப்பூர்-தர்மபுரி (2016-17)  36 கி.மீ- ரூ. 360 கோடி திண்டிவனம்-ஏஹிரி (2006-07) 179 கி.மீ. -ரூ 2,300 கோடி; மற்றும் காரைக்கால்-பேரளம், சின்னசேலம்-கள்ளக்குறிச்சி ஆகிய 10 திட்டங்கள் கடந்த காலங்களில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டன. ஆனால் இந்த 10 திட்டங்களுக்கும் தற்போது தலா ஆயிரம் ரூபாய் மட்டுமே ஒதுக்கப் பட்டுள்ளது.  இவ்வாறு சு.வெங்கடேசன் கூறினார். 

எச்.ராஜாவின் அளப்புக்கு பதிலடி
பிரதமர் மோடி தமிழக மக்கள் மீது “அன்பு” வைத்துள்ளதாக பாஜக தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா மதுரையில் ஞாயிற்றுக்கிழமை செய்தி யாளர்களிடம் அளந்துவிட்டார்.  இதுகுறித்து மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசனிடம் கேட்டதற்கு தமிழக மக்கள் மீது வைத்த ‘அன்பிற்கு’ ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கிய வெறும் பத்தாயிரம் ரூபாயே சாட்சி. அதே நேரத்தில் உத்திரப்பிரதேச ரயில்வே திட்டங்களுக்கு ரூ 7,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதும் கவணிக்கத்தக்கது என்றார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளில் அக்கறையற்ற போக்கு
மதுரை எய்ம்ஸ் பற்றியும் சு.வெங்க டேசன் தனது பேட்டியில் குறிப்பிட்டார். ‘‘மதுரையின் எய்ம்ஸ் மருத்துவ மனை பணிகள் ஜப்பான் நாட்டின் ஜெய்கா நிறுவனத்தின் நிதியுதவி யுடன் தொடங்கப்பட்டு பணிகள் நடை பெற்று வருகின்றன. ஜெய்கா நிறுவனம் வருகிற டிசம்பர் மாதம் திட்ட வரைவு அறிக்கையை இறுதி செய்யவுள்ளது.  மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2023-ஆம் ஆண்டு தொடங்கப்பட வேண்டும். அதற்கான மருத்துவ மாணவர் சேர்க்கையை இந்தாண்டே தொடங்கியிருக்க வேண்டும். மங்களகிரி, பீபீ நகரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுவிட்டது.  மதுரையோடு சேர்த்து அறிவிக்கப் பட்ட ஜம்மு எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை இந்தாண்டு ஆகஸ்டில் தொடங்க உள்ளது. எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மாண வர் சேர்க்கையை தொடங்குவதற்கு தற்காலிகமாக தனி கட்டடம், 300 படுக்கைகள் கொண்ட ஒரு இணைப்பு  மருத்துவமனை தேவை. அதற்கான வாய்ப்புகள் மதுரையில் அதிகமுள்ளது. தேவைப்பட்டால் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் ஒரு பிரிவைக் கூட இதற்காக ஒதுக்கலாம்.  தமிழக முதல்வரும் சுகாதாரத் துறை அமைச்சரும் உடனடியாக தலையிட்டு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒரு தனி அதிகாரியை நியமித்து அடுத்த ஆண்டாவது மருத்துவ மாணவ சேர்க்கையை தொடங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். எய்ம்ஸ் மருத்துவமனையும், மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகமும் (நெய்பர்) மதுரை வளர்ச்சியின் இரு கண்கள். இவை இரண்டையும் திட்டமிட்டபடி கொண்டுவர தொடர்ந்து முயற்சிப் பேன்’’ என்று அவர் கூறினார். பேட்டியின்போது மதுரை புற நகர் மாவட்டச் செயலாளர் சி.ராம கிருஷ்ணன், மாநகர்மாவட்டச் செயலா ளர் இரா.விஜயராஜன். திருப்பரங் குன்றம் தாலுகா செயலாளர் வி.முத்து ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.