சென்னையில் இதழியல், ஊடகவியல் கல்வி நிறுவனம் தொடங்கப்படும்
சட்டப்பேரவையில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவிப்பு
சென்னையில் இதழியல், ஊடகவியல் கல்வி நிறுவனம் இந்தக் கல்வியாண்டு முதல் தொ டங்கப்படும் என செய்தித்துறை அமைச்சர் அறிவித்தார். தமிழ்நாடு சட்டப் பேரவையில் செய்தி, விளம்பரம் மற்றும் எழுது பொருள் அச்சு துறையின் மானிய கோரிக்கைகள் மீது நடைபெற்ற விவாதங்களுக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் மு.பெ.சாமி நாதன், “இனி ஒவ்வொரு ஆண்டும் கருணாநிதி பிறந்த நாள் செம் மொழி நாளாக கொண்டாடப்படும்” என்றார். கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் புதிதாக 39 சிலைகள் திறக்கப்பட்டு உள்ளன. மேலும் 12 சிலைகள் திறக்கப்பட உள்ளன. அரசு சார்பில் மாவட்டங்கள் தோறும் நடத்தப் பட்ட பொருட்காட்சிகள் மூலம் அரசுக்கு ஒரு கோடி ரூபாய் வரை லாபம் கிடைத்திருக்கிறது. எனவே, ஆண்டுதோறும் இது போன்ற பொருட்காட்சிகள் நடத்தப் படும் என தெரிவித்தார்.
திரைக் கலைஞர்களுக்கு விருது
சின்னத்திரை மற்றும் திரைப்பட கலைஞர்களுக்கு ஆண்டுகள்தோ றும் வழங்கப்பட்டு வந்த விருது கள் கடந்த கால ஆட்சியில் நிறுத்தப் பட்டது. இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, வருகிற ஜூலை மாத இறுதிக்குள் இந்த விருதுகள் வழங்கப்படும் என்றும், திருவள்ளூர் மாவட்டம் குத்தம் பக்கத்தில் சுமார் 150 ஏக்கரில் ஒரு திரைப்பட நகர் உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் சாமிநாதன் கூறினார்.
மேலும் 10 நூல்கள் நாட்டுடைமை
தமிழ்நாடு அரசால் இதுவரை 189 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளன. இந்த நூல்களின் மரபுரிமையாள ருக்கு ரூ.15.32 கோடி நூல் உரிமைத் தொகை வழங்கப்பட்டு உள்ளது. மேலும் 10 தமிழறி ஞர்களின் நூல்கள் நாட்டுடைமை யாக்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, எம்ஜிஆர் திரைப்படம், தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் கலைஞர் திரைக் கருவூலம் அமைக்கப்படும். தவத்திரு குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழா சிவகங்கை மாவட்ட அளவில் அரசு விழா வாக கொண்டாடப்படும். நாகூர் அனிபா நூற்றாண்டு விழா நாகப் பட்டினம் மாவட்ட அளவில் அரசு விழாவாக கொண்டாடப்படும். இதழியல் துறையில் பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் ஊடகக் கல்வி மேம்பாட்டிற்கு ஒரு முதன்மை யான கல்வி நிறுவனத்தை நிறுவி, அதன்மூலம் ஆர்வம் மிகுந்த இளம் திறமையாளர்களை ஊக்கு விக்கவும், இதழியல் மற்றும் ஊடக ஆய்வியலில் தரமான கல்வியை வழங்கிடும் வகையில், இதழியல் மற்றும் ஊடகவியல் கல்வி நிறு வனம் இந்த கல்வியாண்டு முதல் தொடங்கப்படும் என்று புதிய அறி விப்புகளை வெளியிட்டார்.