tamilnadu

img

திரிபுராவில் சிபிஎம் கட்சியில் இணைந்த 45 குடும்பங்கள்

திரிபுராவில் பாஜக ஆட்சி நடை பெற்று வருகிறது. மக்கள் நலன் தொடர்பான செயல்களை தவிர்த்து மற்ற அடாவடி வேலைகளை அம்மாநில பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது.  

இந்நிலையில், வடக்கு திரிபுரா மாவட்டத்தில் 45 குடும்பங்களைச் சேர்ந்த வர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்துள்ளனர். சுமார் 100 வாக்கா ளர்களை கொண்ட இந்த 45 குடும்பங்களி டம் திரிபுரா சிபிஎம் மாநிலச் செயலாளர் ஜிதேந்திர சவுத்ரி செங்கொடியை ஒப்ப டைத்து வரவேற்றார். கட்சியில் இணைந்த 45 குடும்பங்களும் பேச்சார்த்தல் கிரா மத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். அந்த கிராமத்தில் 60 குடும்பங்கள்  மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது. அதில் 45 குடும்பங்கள் சிபிஎம் கட்சியில் இணைந் துள்ளதால் ஆளும் பாஜக அதிர்ச்சியில் உறைந்துள்ளது.