tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஜிப்மர் அறிவிப்பு புதுச்சேரி

ஹோலி பண்டிகையொட்டி ஜிப்மரில் வெளிப்புற நோயாளிகள் பிரிவு வரும் 14-ல் இயங்காது என்று  ஜிப்மர் அறிவித்துள்ளது. புதுவை ஜிப்மர் இயக்குநர் அலுவ லகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஒன்றிய அரசு  விடுமுறை தினமான மார்ச் 14 ஆம் தேதி ஹோலி பண்டிகையை முன்னிட்டு ஜிப்மரில் வெளிப்புற நோயாளி கள் பிரிவு இயங்காது. இந்த தேதியில் நோயாளிகள் வரு வதை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். எனி னும் அவசர பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம்போல இயங்கும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இடைக்கால தடை

சென்னை: எந்திரன் திரைப்பட விவகாரத்தில் இயக்குநர் சங்கரின் ரூ.10.11 கோடி சொத்துகள் அமலாக்கத்துறை இயக்குநரகத்தால் முடக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சங்கர் மனு தாக்கல் செய்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “தனிநபர் அளித்த  புகாரின் அடிப்படையில் குற்றம் நடந்துள்ளதாக கூறி வழக்குப் பதிவு செய்ய முடியுமா? தனி நீதிபதி சங்கருக்கு ஆதரவாக தீர்ப்பளித்த நிலையில், இறுதி முடிவுக்கு காத்தி ராமல் உடனடியாக நடவடிக்கை எடுத்தது ஏன்?” என்று கேள்வி எழுப்பினர். மேலும், இயக்குநர் சங்கரின் ரூ.10.11 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கியதற்கு நீதிபதிகள் இடைக்காலத் தடை விதித்தனர். அத்துடன் சங்கர் மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசா ரணையை ஏப். 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ரவுடி படுகொலை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ராஜா மீது கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் உள்ளிட்ட  20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், திருக்காலிமேட்டில் 5 பேர் கொண்ட கும்பல்  சுற்றி அவரை வளைத்து, தலை, கை, கால்களில் சரமாரி யாக வெட்டியதுடன் நாட்டு வெடிகுண்டு வீசினர். இதில், ரத்த  வெள்ளத்தில் சரிந்த ரவுடி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விதி மீறலாம்

சென்னை: தமிழ்நாடு உடற்கல்வியியல் விளையாட்டு பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழுவின் யுஜிசி பிரதிநிதியை தவிர்த்துவிட்டு, அரசாணையை வெளியிட்டது நீதிமன்ற விதிமீறல் என ஆளுநர் மாளிகை அறிக்கை விடுத்துள்ளது.

விஜய் மீது புகார்

சென்னை: சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் தவெக சார்பில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்  விஜய் பங்கேற்றார். இதில், இஸ்லாமியர்கள் அவமதிக்கப் பட்டதால் விஜய் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு சுன்னத் ஜமாத் அமைப்பின் பொருளாளர் சையத் கவுஸ் சென்னை காவல்துறை ஆணையர் அலு வலகத்தில் புகார் அளித்துள்ளார்.

வேங்கைவயல்: 3 பேருக்கு ஜாமீன்

விழுப்புரம்: வேங்கைவயல் விவகாரத்தில் குற்றப் பத்திரிகையில் இடம்பெற்றுள்ள 3 பேருக்கும் மாவட்ட உரி மையியல் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் இடம்பெற்றுள்ள காவலர் முரளி ராஜா, முத்துகிருஷ்ணன், சுதர்சன் ஆகியோர் நீதிமன்றத் தில் செவ்வாயன்று ஆஜராகினர்.

23 பேர் டிஸ்மிஸ்

சென்னை: பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 23 பேரை பணியில் இருந்து நீக்கி அமைச்சர் அன்பில் மகேஸ் ஆணை  பிறப்பித்துள்ளார். பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத 23 பேர் பணியில் இருந்து  நீக்கப்பட்டுள்ளனர். 46 பேர் மீது விசாரணை நடைபெற்று  வந்த நிலையில், 23 பேர் மீது குற்றங்கள் நிரூபணமானதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வனத்துறை தேர்வில் ஆள்மாறாட்டம்: 8 பேர் கைது

ஒன்றிய அரசின் வனத்துறை பணிக்கான எழுத்துத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த 8 பேர் கைது சிறையில் அடைக்கப்பட்டனர். இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில்  சார்பில் எழுத்தர், தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் தொழில்நுட்ப  உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டு, எழுத்துத் தேர்வு கடந்த பிப்ரவரி 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான ஆவணங்கள் சரி பார்க்கும் நேர்முகத் தேர்வின்போது, சில இளைஞர்களின் புகைப்படங்களும் எழுத்துத் தேர்வு நுழைவுச் சீட்டில் இருந்த புகைப்படங்களும் வேறுபட்டிருந்தன. விசாரணையில், எழுத்துத் தேர்வில் வேறு நபர்களை கலந்துகொள்ள வைத்து  ஆள்மாறாட்டம் செய்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட வர்கள் உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, பீகார்  மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். 8 பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.