பாஜக ஆளும் மணிப்பூர் மாநிலம் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக வன்முறையால் பற்றி எரிந்து வருகிறது. இந்த வன்முறைக்கு 260க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பல லட்சம் மக்கள் சொந்த மாநிலத்திலேயே அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், மணிப்பூர் கலவ ரத்தில் அம்மாநில முதல்வர் பைரேன் சிங்கிற்கு பங்கு உள்ளதாகவும், அவரே கலவரத்தை தூண்டிவிட்டதாகவும் குக்கி பழங்குடி இனப்பிரிவு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது. இந்த வழக்கு திங்களன்று விசார ணைக்கு வந்தது.
அப்போது குக்கிகள் தரப்பில் வழக்க றிஞர் பிரசாந்த் பூஷன் ஆஜராகி வாதிட்டார். வாதத்தின் போது,”கலவ ரத்தை தூண்டியதாக வெளியான காணொலி “டிருத் லேப் (Truth Lab)” மையம் மூலம் சோதனை செய்ததில் 93% குரல் மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங்கின் உடையது ஆகும். கலவரத்தில் முதல்வருக்கு தொடர்பு உள்ளதால் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இது மிக முக்கியமான பிரச் சனை” என பிரசாந்த் பூஷன் கூறினார்.
இதைத் தொடர்ந்து ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா,“இது குறித்து மாநில அரசு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. டுவிட்டர் எக்ஸ் நிறுவ னத்திடம் ஆவணங்கள் கோரப்பட்டுள் ளன. முதல்வரின் ஒலிப்பதிவு தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பப் பட்டுள்ளது” எனக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்ற நீதிபதிகள்,”ஒன்றிய அரசின் தடய அறி வியல் சோதனை மையம் மணிப்பூர் பாஜக முதல்வரின் குரல் பதிவு குறித்து ஆய்வு செய்து சீலிட்ட கவரில் அறிக்கை அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டு, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை மார்ச் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.