tamilnadu

img

இன்பச் சுற்றுலா! - கோ.பால.முருகு

அந்தப் பள்ளியில் ஆண்டுதோறும் மாணவர்களைச் சுற்றுலா அழைத்துச்  செல்வது வழக்கம். “இந்த ஆண்டு எங்கே  சுற்றுலாச் செல்லலாம்?” என்று மாணர்களி டம் கேட்டபோது பெரும்பகுதி மாணவர்கள் “ஐயா.. இந்த ஆண்டு சிதம்பரம், திருக்கடை யூர், நாகூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி சென்று வரலாம்” என்று பெரும்பகுதி மாண வர்கள் கூறினார்கள். அதன்படி அந்த இடங்க ளுக்குச் செல்வது என்று முடிவு செய்யப்பட்டது. சுற்றுலா செல்லும் அந்த மாதம் பதி னைந்தாம் தேதியை எதிர்பார்த்து மாண வர்கள் காத்திருந்தார்கள். முதல்நாள் சுற்றுலா  செல்லும் மாணவர்களைக் கூட்டி “காலை ஐந்து மணிக்குப் பள்ளிக்கு வரவேண்டும். காலைச் சிற்றுண்டியை அனைவரும் எடுத்து  வரவேண்டும். மதிய உணவை நாங்கள் தரு வோம். மாணவர்கள் ஒழுங்கு கட்டுப்பாடோடு நடந்து கொள்ள வேண்டும்” என்று தமிழா சிரியர் வரதராசன் தெளிவாக எடுத்துச் சொன்  னார். மதிய உணவு புளிச்சோறு, தயிர்ச் சோறு  இரண்டையும் தயாரிக்கும் பொறுப்பை வரத ராசனே ஏற்றுக் கொண்டு சமையல் காரரை வைத்து தயார் செய்து அவைகளை இரண்டு பெரிய பாத்திரத்தில் எடுத்துக் கொண்டார். மாணவர்கள் அனைவரும் காலை ஐந்து மணிக்குப் பள்ளிக்கு வந்துவிட்டார்கள். அனைவரையும் பேருந்தில் ஏற்றி ஒழுங்கு படுத்தினார்கள். சரியாக ஐந்து முப்பதிற்கு பேருந்து புறப் பட்டது. புறப்பட்ட உடனேயே மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் கைதட்டியும் ஆரவாரம் செய்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். முதலில் பக்கத்தில் இருக்கும் சிதம்பரம் நடராசர் கோயிலுக்குச் சென்றனர். கோயிலைச் சுற்றிப் பார்த்துவிட்டு அங்கேயே மாணவர்கள் கொண்டு வந்தி ருந்த காலைச் சிற்றுண்டியைச் சாப்பிட்டனர். அங்கிருந்து அடுத்த இலக்கான திருக்  கடையூர் சென்று அங்கிருக்கும் அமிர்தக டேசுவரர் ஆலயத்தின் அழகைப் பருகி விட்டுத் தரங்கம்பாடி கோட்டைக்கு வந்து சேர்ந்தனர்.அங்குதான் முதன் முதலில் எழுத்துகளை அச்சிடும் தொழில் நுட்பம் பயன்படுத்தப் பட்டது என்பதை வரதராசன் விளக்கிச் சொன்னார். அதைவிட வியப்பு  வெகு தொலைவில் உள்ள கிணறு,குழாய்களி லெல்லாம் உப்புத் தண்ணீர் உடையதாக இருந்தாலும் கடல் பக்கத்திலேயே இருக்கும் கோட்டையின் உள்ளே உள்ள கிணற்று நீர் உப்புக் கரிக்காத நன்னீராக இருப்பதைச் சொல்லித் தண்ணீரை முகர்ந்து மாணவர்கள் குடிப்பதற்கும் கொடுத்தார்.

கடற்கரையைப் பார்வையிட்ட பின்னர் நாகூரை நோக்கிப் பேருந்து புறப்பட்டது. காரைக்காலைக் கடந்து நாகூர் செல்லும்போது மதியம் ஒரு மணியாயிற்று. அங்கே புகழ் பெற்ற தர்க்காவைச் சுற்றிப் பார்த்தனர். தமிழாசிரியர் வரதராசன்” மாண வர்களே… இந்த இஸ்லாமிய தர்கா அனைத்து மதத்தினராலும் வணங்கப்படுகின்ற இட மாகும். மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக் காட்டாகச் சொல்லலாம்” என்று கூறினார். அங்கேயே மதிய உணவை முடித்தனர். இப்போது கடைசியாகச் செல்ல வேண்டிய  இடம் வேளாங்கண்ணி. அது குறித்துப் பேருந்து சென்று கொண்டிருக்கும் போதே சொல்ல ஆரம்பித்தார் வரதராசன். ”மாண வர்களே.. நாம் அடுத்து செல்ல இருக்கிற  வேளாங்கண்ணி தேவாலயம் கிறித்த வர்களின் வழிபாட்டுத்தலம். இதுவும் நாகூர் போலவே அனைத்து மதத்தினராலும் கொண்டாடப் படுகின்ற இடம். உலகின் பல பகுதியில் இருந்து இத்தேவாலயத்திற்கு ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வந்து கொண்டே இருப்பார்கள்”என்று சொல்லிமுடித்தார். சுற்றுலாவின் நிறைவுப் பகுதியான வேளாங்கண்ணியில் இறங்கி தேவாலயம், கண்காட்சி இவைகளைச் சுற்றிப் பார்த்து விட்டு அனைவரும் பேருந்தில் ஏறினார்கள். தொடக்கத்திலேயே வரதராசன் சொல்லி யிருந்தார்.”இப்போது யார் யார் பக்கத்தில் யார் யார் அமர்ந்திருக்கிறீர்களோ அது போலக் கடைசிவரை அமர வேண்டும் எந்த  காரணத்தை முன்னிட்டும் இடம் மாறக் கூடாது. அதுபோல ஒரு இடத்தைப் பார்த்து விட்டு பேருந்தில் ஏறும்போது அவரவர் பக்கத்தில் இருந்தவர்கள் இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்” என்று கூறி யிருந்தார். அதன்படி எல்லோரும் பார்த்த போது கடைசி இருக்கையில் அமர்ந்திருந்த சங்கர் ”ஐயா.. என்பக்கத்தில் இருந்த வெங்க டேசன் இன்னும் வரவில்லை” என்று சொல்லும் போதே, இன்னொரு இருக்கை யில் இருந்து “ஐயா..எங்கள் பக்கத்தில் இருந்த சுகுமார், சுந்தர் இவர்களும் வரவில்லை யென்றனர். இப்போது மூன்று பேர் மட்டும் பேருந்தில் ஏறவில்லை. துணைக்காக வந்தி ருக்கும் ஆசிரியர்களில் வரதராசனும், கிருஷ்ணமூத்தியை தவிர மற்ற இருவர் இடத்தைவிட்டு நகராதவர்கள். “எஸ்.எஸ்.கே நீங்க கோயிலைச் சுற்றித் தேடுங்கள். நான்  கடற்கரைப் பக்கம் தேடுகிறேன்” என்று வரத ராசன் சொல்ல இருவரும் தேடத் தொடங்கி னார்கள். வரதராசன் கடற்கரைக்குச் செல்லும் வழி யில் உள்ள கடைகளைப் பார்த்தவாறே வந்தார். கடற்கரையை நெருங்கிவிட்டார். யாரையும் காணவில்லை. பக்கத்திலே கடற்கரையை ஒட்டி உள்ள இடத்தில் கூட்ட மாகச் சுற்றி நின்று கொண்டிருந்தனர். அவ்வி டத்திற்கு விரைந்தார் வரதராசன்.கூட்டத்தை விலக்கிவிட்டு உள்ளே பார்த்தால் சுகுமார் மயக்க நிலையில் படுத்திருக்கிறான். பக்கத் திலே செய்வது அறியாமல் கலங்கிப்போய் வெங்கடேசனும் சுந்தரும் நின்று கொண்டி ருந்தார்கள்.

பக்கத்தில் நின்றவர்களில் ஒருவர்”சார்…இந்த பையனைக் கடற்பாம்பு கடித்திருக்கிறது.அது கொடிய விஷம் உள்ளது,உடனே தேவா லய மருத்துவ மனைக்குத் தூக்கிச் செல்லுங்கள்.நேரம் ஆக ஆக உயிருக்கு ஆபத்து” என்று சொன்னதைக் கேட்ட வரத ராசன் பதறிப் போனார். பக்கத்தில் நின்ற இளைஞர்களிடம் உதவி கேட்க.அவர்கள் இரண்டு மூன்றுபேர் சேர்ந்து தூக்கிக் கொண்டு ஓட ஆரம்பித்தனர்.ஒரு ஐந்து நிமி டத்திலேயே மருத்துவ மனையை அடைந்து செய்தியைச் சொன்னார்கள். “நல்ல வேளை நேற்றெல்லாம் அந்தப் பாம்பின் விஷக்கடி ஊசி கையிருப்பில் இல்லை. இப்போதுதான் கொரியரில் வந்தது”  என்று சொல்லிவிட்டு பெஞ்சில் படுக்க வைத்து ஊசியை இடுப்பில் போட்டார். சிறிது நேரத்தில் கண் விழித்த சுகுமார் மிரள மிரள விழித்தான். வரதாராசனுக்குப் போன உயிர் திரும்பியது. ”ஏண்டா... அங்கே கடற்கரைக்குப் போகும் வழியிலேயே பெரிதா அறிவிப்புப் பலகை வைத்திருக்கிறார்களே” இங்கே விஷப் பாம்புகள் இருப்பதால் கடலில்  குளிக்கத் தடை செய்யப்பட்டுள்ளது என்று… அதைக் கூடப் படிக்காமல் இப்படி முட்டாள்தன மாக நடந்து கொண்டீர்களே. ஏதாவது அசம்பா விதம் நடந்திருந்தால் உங்க பெற்றோருக்கு யார் பதில் சொல்வது. அதுமட்டுமல்ல எங்க வேலைக்கும் உலை வைத்திருப்பீர்களே! என்று வேதனைப்பட்டார். பேருந்து புறப்  பட்டு இரவு ஒன்பது மணிக்கு பள்ளி வளா கத்திற்குள் வந்து சேர்ந்தது.மறுநாள் பள்ளிக் கூடம் முழுவதும் இதே பேச்சாக இருந்தது.