tamilnadu

காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல்

காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல்

5 பத்திரிகையாளர்கள் உள்பட 20 பேர் பலி!

காசா, ஆக. 25 - காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 5 பத்திரிகையாளர்கள் உள்பட 20 பேர் கொல்லப் பட்டுள்ளதாக பாலஸ்தீன சுகாதாரத் துறை அறி வித்துள்ளது. தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகருக்கு உட்பட்ட நாசர் மருத்துவமனையின் மீது இஸ்ரேல் ராணுவம், திங்களன்று இருமுறை தொடர்ந்து குண்டுவீசி தாக்குதல் நடத்தியது.  இதில் 4 வது தளத்தில் இருந்தவர்கள் கொல்லப் பட்டதாக காசா குடிமக்கள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இதில், ராய்ட்டர்ஸ், அசோசியேடட் பிரஸ், அல் ஜஸீரா போன்ற சர்வதேச செய்தி நிறுவனங்களின் பத்திரிகையாளர்களும், புகைப்படக் கலைஞர்களும் உயிரிழந்ததாக பாலஸ்தீன சுகாதாரத் துறை உறுதி செய்துள்ளது.