tamilnadu

img

திரிணாமுல் எம்எல்ஏ-வை கைது செய்த அமலாக்கத்துறை

திரிணாமுல் எம்எல்ஏ-வை கைது செய்த அமலாக்கத்துறை

மேற்கு வங்க மாநிலத்தில் திரி ணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம் மாநில பள்ளி சேவை ஆணையத்தால் நடத்தப்பட்ட ஒன்பதாம் மற்றும் பத்தாம்  வகுப்பு உதவி ஆசிரியர் ஆட்சேர்ப்பில்  ஊழல் நடந்ததாகக் கூறப்படும் குற்றச் சாட்டின் அடிப்படையில், திங்கள்கிழமை காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் புர்வான் தொகுதி எம்எல்ஏ-வான ஜிபன் கிருஷ்ண சாஹா (திரிணாமுல் காங்கிரஸ்) வீட்டிற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள சென்றனர். அமலாக்கத்துறை அதிகாரிகளின் வாகனத்தை கண்டதும் ஜிபன் வீட்டின் முதல் மாடியில் இருந்து குதித்து,  எல்லைச் சுவரில் ஏறி தப்பிக்க முயன்ற தாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர். 2ஆவது முறை... கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே ஆசிரியர் ஆட்சேர்ப்பு விவகா ரம் காரணமாக மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) ஜிபன் கிருஷ்ண சாஹா வை கைது செய்தது. எனினும் நீதிமன்றத் தால் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.