ஆம்புலன்ஸ் ஊழியர்களை தாக்கினால் 10 ஆண்டு வரை சிறை:
அரசு எச்சரிக்கை
சென்னை, ஆக. 25 - வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதியில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நடத்திய பொதுக் கூட்டத்தின் போது ஆம்புலன்ஸ் ஒன்று அந்த வழியாக வந்த நிலையில், அதைப் பார்த்து கோப மடைந்த அவர் ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு மிரட்டல் விடுத்துள்ளார். “அடுத்த கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வந்தால் அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அதில் நோயாளியாக மருத்துவமனைக்குச் செல்வார்” என்று அவர் தெரிவித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியில் எடப்பாடி பழனிசாமி யின் பிரச்சாரத்தின்போது ஆம்புலன்ஸ் ஒன்று வந்த நிலையில், அதை மறித்த அதிமுக வினர் ஓட்டுநரை தாக்க முயன்றுள்ளனர். ஆம்புலன்ஸ் ஓட்டுநர் நோயாளியை உடனடி யாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டிய அவசியத்தை எடுத்துக் கூறினார். ஆனால் அங்கிருந்த அதிமுகவினர் அதைக் கேட்காமல் அவரைத் தாக்க முயன்றுள்ள னர். இந்நிலையில், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீதும், ஆம்புலன்ஸ் மீதும் தாக்குதல் நடத்தி னால் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையுடன் கூடிய அபராதம் விதிக்கப்படும் என மருத்து வம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கை யில், “ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீதும் ஆம்புலன்ஸ் மீதும் ஒரு நபர் தனியாகவோ, கூட்ட மாகவோ மற்றும் எந்த ஒரு அமைப்பின் மூலமாகவோ அரசு அவசரகால ஊர்தி அல்லது பணியாளர்கள் மீது வன்முறை யில் ஈடுபட்டால், ஜாமீனில் வெளிவர இய லாத பிரிவின்கீழ் கைது செய்யப்பட்டு குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையுடன் கூடிய அபராதம் விதிக்கப்படும். அத்துடன் சொத்துகளுக்கு ஏற்படும் சேதாரங்களுக்கான தொகையும் நீதிமன்றத் தின் மூலம் அபராதத்துடன் செலுத்த நேரிடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.