tamilnadu

img

ரூ.51.04 கோடியில் புதிய கல்லூரி கட்டிடங்கள் திறப்பு

ரூ.51.04 கோடியில் புதிய கல்லூரி கட்டிடங்கள் திறப்பு

சென்னை, ஆக. 25 - உயர்கல்வித் துறை சார்பில், அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் கல்லூரி, அழகப்பா பல்கலைக்கழகம், அரசு கலை  மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு  பல்வகை தொழில்நுட்பக் கல்லூரிகள் ஆகிய வற்றில் 51 கோடியே 4 லட்சம் ரூபாய் செல வில் கட்டப்பட்டுள்ள பல்வேறு கட்டடங்களை  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில் காணொலி வாயி லாக திறந்து வைத்தார். திறந்து வைக்கப்பட்ட கட்டடங்களில் மதுரை மாவட்டம் அரசு பல்வகை தொழில் நுட்பக் கல்லூரியில் 3 கோடியே 89 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட 6  வகுப்பறைகள், 2 ஆய்வகங்கள் மற்றும் 5 கழி வறைத் தொகுதிக் கட்டடங்கள், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 3 கோடி ரூபாயில் கட்டப் பட்ட தேர்வுக்கூடம், அழகப்பா பல்கலைக் கழகத்தில் 2 கோடி ரூபாயில் கட்டப்பட்ட புத்தாக்க வளர் மையம், திருநெல்வேலி மாவட்டம் மானூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 12 கோடியே 58 லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட கட்டடம் உள்ளிட்டவை அடங்கும்.