ஏ.ஐ. ஆசிரியை அறிமுகம்
இராமேஸ்வரம்: ‘ஆர்டிபிஷியல் இன்டலிஜன்ஸ்’ (ஏ.ஐ.) எனப்படும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு உலகளவில் பல்வேறு துறைகளில் கால் பதித்து வருகிறது. கணினி தொழில்நுட்பத்தின் கொடையான ஏ.ஐ. பல்வேறு பரிணாமங்களை நோக்கி அசுர வேகத்தில் பயணிக்கிறது. இந்நிலையில், இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் அருகே இயங்கி வரும் தனியார் பள்ளியில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் இயங்கும் ரோபோ ஆசிரியை புதனன்று அறிமுகம் செய்யப்பட்டார். இந்த ரோபோ முன் மாணவர்கள் வரிசையாக நின்று, பல்வேறு பாடங்கள் தொடர்பான கேள்விகளை எழுப்பினர். இந்த கேள்விகளுக்கு ஏ.ஐ. ரோபோ சளைக்காமல் பதில் அளித்தது. இந்த ரோபோவால் 25 இந்திய மொழிகள் மற்றும் 25 சர்வதேச மொழிகளில் சரளமாக பேச முடியுமாம்.
‘எஜமான விசுவாசம்’
சென்னை: “நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் விவகா ரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை பாஜகவைப் போல் அதிமுகவும் புறக்கணித்து, எஜமான விசுவாசத்தை நிரூ பித்துக் காட்டியிருக்கிறது. நீதியின் வாயிலாக ஜனநாய கத்தையும் கூட்டாட்சித் தன்மையையும் பாதுகாக்க திமுக தன் போராட்டத்தைத் தொடரும்” என்று முதலமைச்சர் தெரி வித்திருக்கிறார்.
அமித் ஷா வருகைக்கு எதிர்ப்பு!
சென்னை: “ஒன்றிய பாஜக அரசின் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இணைந்து தமிழக நலன்களுக்கு விரோதமாக தொடர்ந்து செயல்பட்டு வரு கின்றனர். இந்நிலையில், இரண்டு நாள் பயணமாக சென்னைக்கு வருகை தரும் ஒன்றிய நிதியமைச்சர் அமித் ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், எனது தலை மையில் ஏப்.11 (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை, மயிலாப்பூர் அம்பேத்கர் பாலம் அருகில் (சிட்டி சென்டர் அருகில்) கருப்புக் கொடி ஏந்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்று தமிழக காங்கிரஸ் தலை வர் செல்வப் பெருந்தகை தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரி வித்திருக்கிறார்.
மின்சார கொள்முதல் ஒப்பந்தம்
சென்னை: தமிழ்நாட்டுக்கு 7915 மெ.வாட் மின்சா ரத்தை ஒப்பந்த அடிப்படையில் கொள்முதல் செய்ய மின்வாரியத்துக்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. கோடைகால மின் தேவையை சமாளிக்க 7915 மெகாவாட் மின்சாரம் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
முதல்வருடன் சந்திப்பு
சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் நிர்வாகிகள் சந்தித்தனர். அப்போது வக்பு சட்ட முன்வடிவை முழுமையாக திரும்பப் பெற பேரவையில் தீர்மா னம் நிறைவேற்றியதற்கு நன்றி தெரிவித்தனர். இந்த சந்திப்பின் போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழ கத்தின் தலைவர் துறைமுகம் காஜா ஆகியோர் உட னிருந்தனர்.
புதிய தலைவர் யார்?
சென்னை: பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 11 ஆம் தேதி மதியம் 2 மணி முதல் 4 மணி வரை பாஜக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு தாக்கல் செய்யலாம். தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் பதவிக்கும் விருப்ப மனுத் தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு பாஜக தலைவரை மாற்றம் செய்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய அமைச்சர் அமித் ஷா சென்னை திடீர் வருகைக்கும் விடை கிடைத்திருக்கிறது
‘கிரிண்டர்’ செயலிக்கு தடை
சென்னை: ஆண்களுக்கான தன்பாலின ஈர்ப்பாளர்கள் ‘கிரிண்டர்’ செயலியை பயன்படுத்தி வருவதால் போதைப் பொருள் கடத்தல், வழிப்பறி, மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் போதைப் பொருள் கடத்தல் தொடர்பான 10 வழக்கில், 5 வழக்குகளில் கிரிண்டர் செயலி பயன்படுத்தப் பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. இதனால் கிரிண் டர் செயலியை தடை செய்யக் கோரி தமிழக அரசுக்கு, சென்னை காவல் ஆணையர் அருண் பரிந்துரை செய்திருக்கிறார்.