மதுரை:
ஓய்வூதிய ஒப்படைப்பு நிதியை வருங்கால வைப்பு நிதி ஆணையம் பிடித்தம் செய்ய இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
பல்வேறு ஊழியர் சங்கங்களின் மனுக்களில் ஓய்வூதியத் திட்டத்தில் உறுப்பினர்களாக உள்ள தொழிலாளர்களுக்கு, நிறுவனம் செலுத்தும் பங்களிப்பில் இருந்து ஓய்வூதியம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியத்தில் இருந்து முன்பணமாக வழங்கப்படும் ஓய்வூதிய ஒப்படைப்பு நிதி பல்வேறு தவணைகளில் பிடித்தம் செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.தவணைத் தொகையை முழுமையாக பிடித்தம் செய்த பிறகும் நிறுத்தாமல் தொடர்ந்து பணம் பிடித்தம் செய்யப்படுவதாகவும், பிடித்தம் செய்வதை நிறுத்தி முழு ஓய்வூதியம் வழங்கக்கோரும் மனுக்கள் மீது வருங்கால வைப்பு நிதி ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுக்களை விசாரித்த நீதிபதி, ஓய்வூதிய ஒப்படைப்பு நிதியை வருங்கால வைப்பு நிதி ஆணையம் பிடித்தம் செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.