tamilnadu

இந்திய தலைமை நீதிபதிக்கு அவமதிப்பு பாஜக அரசின் தலித் விரோத நிலைபாடு மீண்டும் அம்பலமானது! சிபிஎம் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி கண்டனம்

இந்திய தலைமை நீதிபதிக்கு அவமதிப்பு பாஜக அரசின் தலித் விரோத நிலைபாடு மீண்டும் அம்பலமானது! சிபிஎம் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி கண்டனம்

புதுதில்லி, மே 21 - உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர். கவாயை அவமரி யாதைக்கு உள்ளாக்கிய, மகாராஷ்டிர மாநில பாஜக அரசுக்கு, மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செய லாளர் எம்.ஏ. பேபி கண்டனம் தெரி வித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தமது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருப்ப தாவது: மும்பையில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில், தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்ற பி.ஆர். கவாய்க்கு மதிப்புக் கொடுக்கும் நடைமுறை பின்பற்றப்படவில்லை. இந்த போக்கு, இந்தியாவில் தொடரும் சாதிப் பாகு பாட்டின் கொடூர உருவமாகும்.  உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவியை வகிக்கும் இரண்டா வது தலித் ஆகிய நீதிபதி கவாய்க்கு மகாராஷ்டிர அரசு அன்பான வரவேற்பை நல்கியிருக்க வேண்டும். ஆனால், அவருக்கு அவமரியாதை செய்யப்பட்டது, இந்தியாவை ஆளும் இந்துத்துவ சக்திகள்- அடிப்படையில் தலித் எதிர்ப்பாளர்களே‌ என்பதை காட்டுகிறது. தலைமை நீதிபதி கவாய் பேசும்  போது: “மகாராஷ்டிராவைச் சேர்ந்த  ஒரு தலைமை நீதிபதி முதல் முறை யாக ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்போது, மாநில தலைமைச் செயலாளர், காவல்துறை இயக்குநர், மும்பை ஆணையாளர் போன்றோர் கலந்து கொள்ளாமல் இருப்பது சரியான முடிவா என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டும். இந்த நடை முறைகள் புதியவை அல்ல; இவை ஒரு அரசியலமைப்பு நிறுவனம் மற் றொன்றுக்கு எந்தளவுக்கு மரி யாதையை வழங்குகிறது என்பதையே காட்டுகிறது” என தெரிவித்துள்ளார். இந்த சம்பவம், பாஜக அரசின் தலித் எதிர்ப்பு நிலைப்பாட்டின் மற்றொரு உதாரணம் மட்டுமே ஆகும். தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்க்கு  செய்யப்பட்ட இந்த அவமரியாதையை நாங்கள் வன்மையாகக் கண்டிக் கிறோம். இவ்வாறு எம்.ஏ. பேபி குறிப்பிட்டுள் ளார்.