tamilnadu

img

சிபிஎம் ஊழியர் மீது ஆர்எஸ்எஸ் குண்டர்கள் கொலைவெறித் தாக்குதல்

நாகர்கோவில், பிப். 5- முதியவர் என்றும் பாராமல் சிபிஎம் ஊழியர் மீது ஆர்எஸ்எஸ் குண்டர்கள் கொலைவெறி தாக்கு தல் நடத்தியுள்ளனர். ஆர்எஸ்எஸ் குண்டர்களை பாதுகாக்க இரணி யல் காவல்துறையினர் துணை நிற்ப தாக சிபிஎம் குற்றம் சாட்டியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகில் உள்ள மணக் கரை கிராமத்தில் வசிப்பவர் கே.சின்னன்பிள்ளை (75). இவர் மதுரையில் அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றியதுடன் சிஐ டியு நிர்வாகியாகவும் செயல்பட்ட வர். மணக்கரையில் உள்ள ஆர்எஸ்எஸ் அமைப்பினர், இவ ருக்கும் இவரது குடும்பத்தின ருக்கும் எதிராக சுமார் 40 ஆண்டு களாக பழிவாங்கும் நடவடிக்கை யில் ஈடுபட்டு வருகின்றனர். வீட்டுக்கு  செல்ல பாதை மறுத்ததுடன் கடந்த காலங்களில் பல தாக்குதல்கள் நடந்துள்ளன. அவற்றுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டங்கள் நடத்தியதுடன் சின்னன்பிள்ளை குடும்பத்திற்கு உறுதுணையாக உள்ளது. இதற்கிடையே நீதிமன்றத்தின் மூலம் பாதைக்கான உரிமை நிலைநாட்டப்பட்டது.

இந்நிலையில், சின்னன் பிள்ளையையும் அவரது குடும்பத் தினரையும் பழிவாங்கும் நோக்கத் துடன் மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளனர். கடந்த பிப்ரவரி 3 திங்களன்று அதிகாலை 4.30  மணியளவில் அதே கிராமத்தைச் சேர்ந்த ஆறுபேர் கொண்ட கும்பல்  சின்னன்பிள்ளை மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளது.  இதில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் அருண்பிரசாத், பாபு, பிரதீஷ், சுப்பிர மணியன், வாதிஷ் உள்ளிட்டோர் இருந்துள்ளனர். படுகாயமடைந்த சின்னம்பிள்ளை உடனடியாக இரணியல் காவல் நிலையம் சென்றுள்ளார். அவர் வந்த ஆட்டோ வில் ஆசாரிபள்ளம் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்லுமாறு தெரிவித்துள்ளனர். அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள சின்னன்பிள்ளையிடம் இதுவரை காவல்துறையினர் விசாரிக்கவோ, வழக்குப் பதிவு செய்யவோ முன்வரவில்லை. இந்நிலையில் பிப்ரவரி 5 புத னன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் ஆர். செல்லசுவாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் உஷா பாசி உள்ளிட் டோர் மருத்துவமனையில் சின்னன் பிள்ளையை பார்த்து ஆறுதல் கூறி னர். ஊர்த்தலைவராக இருந்து கொண்டு காவல்துறையில் பணி யாற்றும் சிவகுமார் என்பவரின் தூண்டுதலின் பேரில் இந்த தாக்கு தல் நடந்துள்ளதாக சின்னன் பிள்ளை தெரிவித்தார்.

புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை :  இரணியல் காவல்துறைக்கு சிபிஎம் கண்டனம்

சின்னன்பிள்ளை மீதான ஆர்எஸ்எஸ் குண்டர்களின் கொலை வெறித் தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  75 வயது முதியவரான சின்னன்பிள்ளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீண்டகால உறுப்பினராவார். குமரி மாவட்டம் வில்லுக்குறி அருகில் மணக்கரையில் இவரது தாயார் தங்கம்மாவுக்கு சொந்தமான வீட்டுமனை உள்ளது. இதை சுந்தரம்பிள்ளை என்பவர் ஆக்கிரமிக்க முயன்றுள்ளார். அதற்கு அப்போது ஊர்த்தலைவராக இருந்த, பின்னர் காவல்துறையில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஈஸ்வரபிள்ளை என்பவர் பக்கபலமாக இருந்துள்ளார். அதையொட்டி ஊர்விலக்கு உள்ளிட்ட தொடர் தாக்குதலை சின்னன்பிள்ளை குடும்பத்தினர் எதிர்கொண்டனர். 1989 இல் தங்கம்மா தொடுத்த வழக்கில் 2023 இல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்படி தங்கம்மாவின் அனுபவத்தில் இருந்த வீடு மற்றும் வீட்டுமனைக்கு செல்லும் வழி சின்னன்பிள்ளை குடும்பத்தினர் வசமானது. 2024 செப்டம்பரில் மரணமடைந்த தங்கம்மாவின் உடல் அவரது வீட்டின் அருகில் தகனம் செய்யப்பட்டு நினைவிடமும் உள்ளது. இந்நிலையில், சின்னன்பிள்ளை குடும்பத்தை பழிவாங்க சுந்தரம்பிள்ளையின் மகன் காவல்துறையில் பணியாற்றி வரும் சிவகுமார் களமிறங்கி உள்ளார். இரணியலில் நீண்டகாலமாக பணியாற்றி வரும் இவர், ஊர்த் தலைவராக உள்ளார். தனக்கு உதவும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகளுக்கு இவர் உறுதுணையாக செயல்படுவது தெரியவந்துள்ளது. இவரது தூண்டுதலின் பேரில் ஆர்எஸ்எஸ் ஊழியரான அருண்பிரசாத் உள்ளிட்டோர் சின்னன்பிள்ளை மீது திட்டமிட்ட கொலை வெறி தாக்குதலை நடத்தி உள்ளனர். இரணியல் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காதது சிவகுமாரின் தலையீட்டை அம்பலப்படுத்துவதாக உள்ளது. இத்தாக்குதல் குறித்தும், ஊர்விலக்கு உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் குறித்தும் தமிழக அரசு விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.