tamilnadu

img

இந்திய ரயில்வே கூலிகளும் பாரதியின் அறச் சீற்றமும்

இந்திய ரயில்வே கூலிகளும் பாரதியின் அறச் சீற்றமும்

1907ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவில் கேப் டவுனிலிருந்து கெய்ரோ வரை ஒரு இருப்புப்பாதை போடப்படுகிறது. நேட்டால் மாநிலத்தில் ஐந்து முதல் பத்து ஆண்டுகளாக கொத்தடிமைகளாக குடியிருக்கும் 5000 இந்தியர்கள் கடுமையான துன்பங்களை அனுபவித்தவர்கள். அவர்களில் 3554பேர் இந்த இருப்புப் பாதைக்காக அழைத்து செல்லப்படுகின்றனர். பெண்களும் குழந்தைகளும் கொண்ட இந்த குழு காடு,மேடு, பாலை எனும் நிலப்பகுதிகளில் 150 மைல்கள் நடத்திச் செல்லப்படுகின்றனர். இருப்புப்பாதை போடும் இடத்தில் மனித நடமாட்டமே இல்லை. காட்டு விலங்குகள் மட்டுமே நடமாடுகின்றன.  

தண்ணீர் இல்லை. நீண்ட நேரம்  தோண்டினால் நீல நிறத்தில் வேப்பெண் ணெய் போன்ற தண்ணீர் கிடைக்கிறது. அதைக் குடித்தவர்களுக்கு காய்ச்சல், வாந்தி பேதி, சொறி சிரங்கு போன்ற நோய்கள் தாக்குகின்றன. சோறு,பருப்பு,  எண்ணெய் மட்டுமே உணவாக வழங் கப்படுகிறது. மூன்றே மாதங்களில் ஆயி ரத்திற்கும் மேற்பட்டவர்கள் இறந்து போகி றார்கள். ஆறு மாதங்களில் இன்னும் ஆயிரம் பேர் மடிகிறார்கள். அங்கிருந்து தப்பிக்க 100 மைல் நடக்கிறார்கள். குழந்தைகளை காபிர்களிடமோ டச்சுக்கா ரர்களிடமோ விற்கிறார்கள்; அல்லது அங்கேயே விட்டுவிடுகிறார்கள். 400 பேர்  டர்பன் வந்தடைகிறார்கள். அங்கே அவர்  களை பராமரிக்க எவரும் இல்லை. 600 பேர்  நேட்டாலிலேயே அவதிப்படுகிறார்கள். அவர்களில் 429பேர் மட்டும் உயிருடன் டர்பன் வருகிறார்கள்.  அவர்களிடம் குடியிருப்புச் சான்றிதழ்  இருந்தபோதிலும் அவர்களை இந்தியா விற்கு வேண்டுமானால் திருப்பி அனுப்பு கிறோம் என்கிறது அந்த அரசாங்கம். மெலிந்து உருக்குலைந்து கந்தைகளை யும் சாக்குத் துணிகளையும் உடுத்திக் கொண்டு இந்தியா வரும் மனித எலும்புக் கூடுகள் பிரிட்டிஷ் அரசாங்கம் இந்திய ஏழை கூலிகளுக்கு காட்டும் பரிவையும் மனிதாபிமானத்தையும் இந்தியர்கள் தங்கள் கண்களால் பார்த்துக் கொள்ள லாம். (சுதேசமித்திரனில் வெளிவந்த கட்டு ரையை மேற்கோள் காட்டி இந்து பத்திரிக்  கையின் பதிவு)  நேட்டால் காங்கிரஸ் தலைவர்கள் அவர்களை சந்தித்தபோது தங்களது விருப்பத்திற்கு எதிராக தாங்கள் இந்தியா விற்கு அனுப்பபப்படுகிறோம். இந்தியா வந்தால் பட்டினிதான் கிடக்கவேண்டும். தங்களிடம் சொற்ப பணம் கூட இல்லை என்றார்கள்.  பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இது குறித்த விவாதத்திற்கு பதிலளித்த அமைச்சர் ஆல்டுவின் இந்தியர்கள் பிரிட்டிஷ் பிரஜைகள் என்றாலும் அவர்களை பிரித்த னியர்களுடனோ டச்சுக்காரர்களுடனோ சமமாக கருத முடி யாது என்று பதிலளித்தார். அப்படியானால் ஏட்டளவில் கூட இந்தியர்களுக்கு வெள்ளை இனத்தவருக்கு கிடைக்கும் குடிமை உரிமைகள் இல்லையா? ‘Civis Brittaannus Sum’ (‘பிரிட்டிஷ் குடிமகன் நாம். பாதுகாப்பு நமது உரிமை’) என்பதற்கு என்ன மதிப்பு என்று கேட்கிறது இது குறித்த இந்து தலையங்கம் (மே 21, 1908)  இந்த தலையங்கத்தின் தொனிதான் பாரதியாரை கோபப்படுத்தியது. அவர் இந்து ஆசிரியருக்கு எழுதுகிறார். ‘நமது நாட்டில் நாம் அனுபவிக்கும் துயரங்களுடன் வெளிநாட்டில் இந்தி யர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் நம்மை விரக்திக்குள்ளாக்குகிறது. பெரிய வர்களாகிய நீங்கள் உங்களுடைய கனிந்த  அனுபவத்தினாலோ கையறு நிலை யாலோ, விரக்தியாலோ அல்லது வேறு ஏதாவது சில்லறை காரணங்களலோ விஷ யங்களை மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறீர்கள். அமைச்சர் ஆல்டுவினுடைய பதிலா னது நம் மீது ஏவப்பட்ட தேச அவமான மாக என்னை தைக்கிறது. நிராயுதபாணி யான அடிமை நாட்டை அவமானப்படுத்து வதில் எந்த ஆபத்தும் இல்லை என்று அவர்  உறுதியாக நம்புகிறார். இவ்வளவு தெளி வாக அறிவித்தபின்னும் ‘பிரிட்டிஷ் குடி மகன் நாம். பாதுகாப்பு நமது உரிமை’  என்று ஏதோ ஒரு பழைய பல்லவியை (வழக்கொழிந்த மொழியில் சொல்லி யிருப்பது இன்னும் பொருத்தமானது) பாடுகிறீர்கள்? இது குறித்து உங்களுக்கு நான் ஒன்றிரண்டு விஷயங்கள் சொல்ல வேண்டும். குடியுரிமை போன்ற உள றல்களுக்கெல்லாம் எந்த பொருளும் இல்லை. நாம் குடிகள் இல்லை. வெல்லப்  பட்டு எதேச்சாதிகாரமாக ஆளப்படும் நாட்டின் பிரஜைகள். நாட்டின் தற்போ தைய அந்தஸ்தை மாற்ற அமைப்பு ரீதியாக தீவிரமான முயற்சிகள் மேற் கொள்ளாவிட்டால் இதே நிலைமைதான் தொடரும்.  சுப்ரமணிய பாரதி- இந்து கட்டுரைகள் - தொகுப்பாசிரியர் ஏ.ஆர்.வெங்கடாசலபதி