தஞ்சாவூர், நவ.5 - அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் தஞ்சாவூரில் நீரிழிவு சிகிச்சை மருத்து வர்கள் கருத்தரங்க நடைபெற உள்ளது. இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங் களிலிருந்து மருத்துவர்கள் பங்கேற்க உள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டைக்கு வருகை தந்த தில்லியைச் சேர்ந்த சர்க்கரை நோய் பாத பாதிப்பு சிகிச்சை நிபுணரும், அச்சங்கத்தின் அகில இந்திய தலைவருமான டாக்டர் ஏ.பி.எஸ்.சூரி செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட எட்டு கோடிக்கும் அதிகமான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள னர். அதில் சரி பாதி பேருக்கு பாதத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. அதில் நான்கில் ஒரு பகுதியினருக்கு கால்களையே அகற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படு கிறது. நீரிழிவு பாத நோய் அவர்களுக்கு மிகக் கடுமையான பாதிப்பை உண்டாக்கி அதன் மூலம் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கும் நிலையை நாம் பார்க்கிறோம். உலகிலேயே இந்தியா தான் நீரிழிவு நோயின் தலைநகரம் என்று சொல்லக் கூடிய நிலை உள்ளது. அந்த அளவுக்கு இந்தியாவில் நீரிழிவு நோயாளிகள் அதி களவு உள்ளனர். நீரிழிவு நோயாளிகள் தங்கள் பாதங்களை பாதுகாக்கும் வகையில், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், நீரிழிவு பாத நோய் சிகிச்சை குறித்து பிரத்யேகமாக கற்றுக் கொண்டுள்ள எங்களைப் போன்ற மருத்துவர்கள் ‘இந்திய நீரிழிவு பாத நோய் சிகிச்சை’ என்ற அமைப்பில் இருந்து செயல்படுகிறோம். இந்தியா முழுவதும் 14 மாநிலங் களில் எங்களுடைய அமைப்பு மருத்துவ சேவையில் ஈடுபட்டு வரு கிறது. தமிழ்நாட்டில்தான் அதிக அள வில் நீரிழிவு பாத நோய் சிகிச்சை அமைப்பில் மருத்துவர்கள் இருந்து கொண்டு சேவை செய்து வருகிறார்கள். நீரிழிவு பாத நோயால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு மட்டுமல்லாமல், அவர் களைச் சார்ந்த குடும்பத்தினருக்கும் ஏராளமான பொருள் செலவும் பொரு ளாதார பாதிப்புகளும் ஏற்படக்கூடிய நிலை உள்ளது. நவீன முறையில் சிகிச்சை நீரிழிவு நோயால் பாதம் பாதிக்கப் பட்டவர்களுக்கு தொடர்ச்சியான சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை உள்ளது. முழுமையான சிகிச்சை அளித் தால், காலையே அகற்ற வேண்டிய பிரச்சனைகளில் இருந்து அவர்களை பாதுகாக்க முடியும். தொடர் சிகிச்சை என்பதால் அவர்களுக்கு பெருமளவு பொருளாதார சிரமங்கள் ஏற்படக் கூடும். இதிலிருந்து அவர்களை மீட்க, நவீன சிகிச்சை முறையைக் கொண்டு வந்து அவர்களுடைய கால்களை அகற்ற வேண்டிய நிலையில் இருந்து பாதுகாத்து, நல்ல ஒரு வாழ்க்கை சூழலை ஏற்படுத்த இந்தியா வில் எங்களுடைய அமைப்பு செயல் பட்டுக் கொண்டிருக்கிறது. நான் ஞாயிறன்று கேரளத்தில் எங்க ளுடைய அமைப்பை துவக்கி வைத்து, அங்கு ஒரு விழிப்புணர்வு கருத்த ரங்கை நடத்தியுள்ளோம். பல்வேறு மாநில மருத்துவர்கள் பங்கேற்பர் வருகிற 2025 ஏப்ரல் மாதத்தில் தஞ்சாவூரில் எங்களுடைய அகில இந்திய அமைப்பு, இங்குள்ள நீரிழிவு நோய் சிகிச்சை மருத்துவர்களுடன் இணைந்து, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரு மிகப் பெரிய கருத்தரங்கத்தை நடத்த இருக் கிறோம். அந்த கருத்தரங்கத்தில் இந்தியா முழுவதிலும் இருந்து, பல்வேறு மாநிலங்களில் நீரிழிவு சிகிச்சையில் ஈடு பட்டு இருக்கக்கூடிய மருத்துவர்கள், ஹோமியோபதி, ஆயுர்வேதம், யுனானி போன்ற மருத்துவ சிகிச்சைகளை செய்யக்கூடிய மருத்துவர்களும் அந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர். மேலும், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள் என அனைவரையும் உள்ளடக்கி இந்த கருத்தரங்கத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம். வளமிக்க தேசமாக மாற்ற திட்டம் இந்தியாவை சர்க்கரை பாத நோய் மற்றும் கால்களை அகற்றுவதில் இருந்து பாதுகாத்து இந்தியாவை ஒரு வளமிக்க தேசமாக மாற்றுவதற்காக நாங்கள் திட்டமிட்டு இருக்கிறோம். அந்த கருத்தரங்கை நடத்துவதற்கு பட்டுக்கோட்டை நீரிழிவு சிகிச்சை மருத்துவர் நிரூபன் சக்கரவர்த்தியை தலைவராகவும், செல்வின் ஜோ சப்பை செயலாளராகவும் கொண்ட ஒரு வரவேற்புக் குழு அமைக்கப்பட உள்ளது. அந்த கருத்தரங்கில் பல்வேறு நாடுகளில் இருந்தும் நீரிழிவு சிகிச்சை சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள். இதன் மூலம் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட வர்கள் தங்கள் கால்களை அகற்றா மல் பாதுகாக்கும் வகையில் இந்தியாவை ஒரு வளமிக்க தேசமாக உருவாக்க இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். பட்டுக்கோட்டை மெரினா மருத்துவ மனை மருத்துவர் நிரூபன் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.