இந்தியா கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளர் பி. சுதர்ஷன் ரெட்டி நாளை தமிழகம் வருகிறார்
சென்னை, ஆக. 22 - இந்தியா கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் பி.சுதர்ஷன் ரெட்டி ஞாயிறன்று தமி ழகம் வருகிறார். நாட்டின் இரண்டாவது உயரிய அரசியலமைப்புப் பதவியான குடி யரசு துணைத் தலைவர் பதவிக்கு செப்டம்பர் 9 அன்று தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது. இத்தேர்தலில், ஒன்றியத்தில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவரை எதிர்த்து, தெலுங்கானாவைச் சேர்ந்தவரும் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான பி. சுதர்ஷன் ரெட்டி ‘இந்தியா கூட்டணி’ கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்தப் பட்டுள்ளார். குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில், இந்தியா கூட்டணி கட்சிகளின் பொது வேட்பாளராக, உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதி பதி பி. சுதர்ஷன் ரெட்டி போட்டியிடு கிறார். அவர் வியாழனன்று தமது வேட்புமனுவையும் தாக்கல் செய்தார். இந்நிலையில், அவர் தமக்கு ஆதரவு திரட்டும் வகையில், ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 24) அன்று தமிழகம் வரவிருக் கிறார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியின் தலை வர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.