tamilnadu

img

பேருந்துகளில் சமூக இடைவெளி “மாயம்” கானல்நீராகிப்போன அமைச்சர் அறிவிப்பு

மதுரை, ஜூன் 4- பேருந்துகளில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படும். 60 சதவீத பயணி கள் ஏற்றப்படுவார்கள். முகக்கவசம் கட்டா யம் என்ற அறிவிப்புகளோடு போக்கு வரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் அரசுப்பேருந்துகளை இயக்க உத்தரவிட்டார். ஆனால், முகக்கவசம் மட்டுமே பயணிகள் அணிந்துள்ளனர். பேருந்துகளில் சமூக இடைவெளி என்பது இல்லை. மதுரையைப் பொறுத்தமட்டில் காலை நேரங்களில் கிராமப்புறங்களிலி ருந்து பெரியார் பேருந்து நிலையத்திற்கு இயக்கப்படும் பேருந்துகளில் சமூக இடைவெளி இல்லை. வழக்கம் போல் பய ணிகள் அமர்ந்து செல்கின்றனர்.

இந்தத் தகவலை போகிற போக்கில் யாரும் கூறவில்லை. மதுரை-அலங்காநல்லூர் மார்க்கத்தில் இயக்கப்படும் சில பேருந்து களை கடந்த இரண்டு நாட்களாக கண் கூடாக பார்த்தபின்பே உண்மையை எழுத வேண்டியுள்ளது. போக்குவரத்துத்துறை அமைச் சரோ, போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குநரோ மதுரையில் கொரோனா தொற்று பரவலுக்கு விதைபோட்டுவிடக் கூடாது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். மதுரையில் மட்டும்தான் இந்தக் கூத்தா என்றால் இல்லை. விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரிலும் இது தான் நடக்கிறது என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. திருவில்லிபுத்தூர், இராஜபாளை யம் கிளைகளில் இயக்கப்படும் பேருந்து களில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப் படவில்லை நகர் பேருந்துகளில் 26 பய ணிகளைத் தான் ஏற்ற வேண்டும். ஆனால், அனைத்து நகர் பேருந்துகளி லும் 60-க்கும் மேற்பட்ட பயணிகள் ஏற்றி இறக்கப்படுகிறார்கள்.

புறநகர் பேருந்து களிலும் இதே நிலைமைதான்.  திருவில்லிபுத்தூர், இராஜபாளை யம் கிளைகளில் வசூலை நோக்கமாகக் கொண்டு கிளை மேலாளர்கள் ஓட்டுநர் கள் நடத்துநர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடிய நிலை உள்ளதாக கூறப்படு கிறது.  சமூக இடைவெளி இல்லாமல் வசூலை நோக்கமாகக் கொண்டு கிளை மேலாளர்கள் அனைத்து பேருந்துகளி லும் வழக்கம்போல் 70-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி இறக்ககு நிர்ப்பந் தப்படுத்துவதோடு தொற்று நோயை இவர்களே உருவாக்கிவிடுவார்கள் போல் தெரிகிறது. இயக்கத்திலும் பாரபட்சம் திருவில்லிபுத்தூரைச் சுற்றியுள்ள கிராமங்களான மம்சாபுரம், அச்சம் தவிர்தான் ஆயர்தர்மம் உள்ளிட்ட கிரா மங்களுக்கு இயக்கப்பட்டு வந்த நகர் பேருந்துகள் தற்போது இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சிவகாசி இராஜபாளையம், வத்திராயிருப்பு போன்ற முக்கியமான வழித் தடங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.  நமது நிருபர்கள்