திருநெல்வேலி, ஆக.26- நெல்லை மாநகரம் பாளையங்கோட்டை குலவனி கர்புரம் ரயில்வே கேட், தியாக ராஜநகர் ரயில்வே கேட் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள் ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஷில்பாவிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாளை தாலுகா செயலாளர் பா.வரகுணன் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: பாளை குலாவணிகர்புரம் ரயில்வே கேட் ஒரு நெரிசல் மிகுந்த பகுதியாகும். இங்கு பல முறை ரயில்வே கேட் அடைக்கப்படுவதுண்டு. இதனால் தினமும் பலமுறை போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இங்கு மேம்பா லம் அமைத்திட பணிகள் துவங்கப்பட்டு திடீரென காரண மின்றி நிறுத்தி வைக்கப்பட்டது. எனவே போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் வகையில் இங்கு உடனடியாக மேம்பாலம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு பாளை தியாகராஜநகரில் தற்போது புதிதாக ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்கும் பணி கள் முடிவடையும் தருவாயில் இருந்தது. ஆனால் தண்ட வாளத்தின் மேல் பகுதியில் மட்டும் பால பணிகள் பாக்கி யுள்ளன. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு பாலபணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் . பாளை, செட்டிகுளம் ஊராட்சிக்குட்பட்ட காமராஜ் காலனியில் வசித்து வரும் 150 ஆதிதிராவிட குடும்பங்களுக்கு 2 நாட்களுக்கு ஒருமுறை குடி தண்ணீர் வந்துகொண்டி ருந்தது. தற்போது ஒரு மாதமாக குடி தண்ணீர் வர வில்லை. எனவே இங்கு குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு இப்பகுதியில் சாலை வசதி,தெருவிளக்கு,சிறுவர் பூங்கா போன்ற அடிப்படை வசதிகளும் செய்து தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. மனு கொடுக்கும் போது சி.பி.எம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.சுடலை ராஜ், க.ஸ்ரீராம், ராஜகுரு மற்றும் கிளை செயலாளர் ரஞ்சித் மற்றும் பலர் உடன் இருந்தனர்.