பாலஸ்தீனர்களுக்கு மனிதாபிமான உதவிகள் சென்றடைய வேண்டும்
போப் லியோ வேண்டுகோள்
வாடிகன்,மே 21- காசா பகுதிக்கு மனிதாபிமான உதவி சென்றடைய வேண் டும்.பாலஸ்தீனர்களின் கொடூரமான துயரம் முடிவுக்கு வர வேண்டும் என்று போப் லியோ வேண்டுகோள் விடுத்துள்ளார். செயிண்ட் பீட்டர் சதுக்கத்தில் கூடியிருந்த சுமார் 40,000 க்கும் அதிகமான பொது மக்களிடையே பொறுப்பேற்றபின் நிகழ்த்திய தனது முதல் உரையில் இதனை அவர் தெரி வித்துள்ளார். தனது உரையில் காசாவுக்கு மனிதாபிமான உதவி கள் சென்றடையவும், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் என அனைவரும் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ள இந்த மோதல்கள் முடிவுக்கு வரவேண்டும் என நான் மீண்டும் மனதார கோரிக்கை விடுக்கிறேன் என்று பேசி னார். மேலும் உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான அடுத்த கட்ட அமைதி பேச்சுவார்த்தைகளை வாடிகன் நடத்தும். அதற்கான தயாரிப்புகள் நடந்து வருவதாகவும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். இத்தாலி பிரதமர் மெலோனி, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ஐரோப்பிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின் வாடிகனுடன் தொடர்பு கொண்டு பேச்சு வார்த்தையை நடத்த வாடிகன் உறுதிப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அங்கு பேச்சு வார்த்தை நடத்துவது என உறுதியாகியுள்ளது.