tamilnadu

img

வரலாற்று சிறப்புமிக்க மொழி உரிமை தீர்ப்பு... வழக்கறிஞர் கண்ணனுக்கு பாராட்டு....

மதுரை:
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுப்பும் கடிதங்களுக்கு ஒன்றிய அரசு இந்தியில் பதில்அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும் என்றுசென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்மதுரை மக்களவை உறுப்பினர்  சு. வெங்கடேசன் வழக்குத்  தொடுத்திருந்தார். ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்பு  இந்தியில் பதில் அனுப்புவதைத் தவிர்த்து ஆங்கிலத்தில் பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.இந்த வழக்கில் சு.வெங்கடேசன் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் கண்ணனுக்கு பாராட்டு விழா மதுரையில் நடைபெற்றது.

மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் எம்.என்.எஸ். வெங்கட்டராமன், மதுக்கூர் ராமலிங்கம், மாநகர்மாவட்டச் செயலாளர் இரா. விஜயராஜன், புறநகர் மாவட்டச் செயலாளர்  சி.ராமகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ். கே. பொன்னுத்தாய் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். வழக்கறிஞர் கண்ணனுக்கு மாநிலச் செயற்குழு  உறுப்பினர் எம். என். எஸ். வெங்கட்டராமன் சால்வை அணிவித்து பாராட்டினார்  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன். நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் கடந்த ஆண்டு ஒன்றிய அரசுக்கு அனுப்பப் பட்ட கடிதத்திற்கு இந்தியில் பதில் வந்ததன் அடிப்படையில் இந்தக் கடிதம்  இந்திய ஆட்சி மொழியின் அடிப்படைக்கு எதிரானது. மாநில அரசுகளின் மொழி உரிமைக்கு எதிரானது என்று வழக்குத் தொடுக்கப்பட்டது. 

வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கிருபாகரன், துரைசாமி ஆகியோர்  அமர்வு,” இந்தியாவில் இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள மக்கள் பிரதிநிதிகள்  தங்களுடைய மக்களின்  உரிமைகளை எடுத்துச் சொல்வதற்கு ஒருமைல் கல்லான தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளது. இந்த வழக்குக்கு ஆதரவாக சென்னை மற்றும் மதுரையில் நீதிமன்றத்தில் வாதாடிய வழக்கறிஞர்கள் புகழேந்தி,கண்ணன் மற்றும் அவரது குழுவுக்கு மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி சார்பாகவும் மக்களவை உறுப்பினர் என்ற அடிப்படையிலும் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

எய்ம்ஸ் பணிகளை விரைவுபடுத்துவோம்
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை 36 மாதங்களில் அமைக்கப்படும் என்று ஒன்றிய அரசுஅறிவித்துள்ளது. ஆனால் எப்போது பணிகள் துவங்கி முடியும்  என்று தெரியாத நிலை உள்ளதேஎன் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், “சமீபத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை குழுக்கூட்டம்  நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். அப்போது 2024-ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிப்பதற்கான சர்வதேச ஒப்பந்தம் என்பது அமைக்கப்பட்டுள்ளதாக கூறினர். மற்ற மருத்துவமனைகள் ஒன்றிய அரசு நீதிவழங்கி கட்டப்படுகிறது ஆனால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மட்டும்தான் ஜப்பானில்  உள்ளஜெய்க்கா என்ற நிறுவனத்தின் நிதி உதவியுடன் கட்டப்பட உள்ளது. மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் (நான்). விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மற்றும் தென்மாவட்ட உறுப்பினர்கள் அனைவரும் தொடர்ந்து இதற்காகப் போராடி வருகிறோம். ஒவ்வொரு நாடாளுமன்ற கூட்டத் தொடரிலும் இதற்கான அழுத்தத்தை கொடுத்து வருகிறோம்மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திட்டத்தை முடிப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவோம்” என்றார்.