புதுதில்லி, ஜன. 17 - திருச்சிராப்பள்ளி - மதுரை இடையிலான 124 கிலோ மீட்டர் தூர 4 வழிச்சாலையை பராமரித்து சுங்கம் வசூலிக்கும் உரிமத்தை பெற ஒன்றிய அரசுக்கு 1692 கோடி செலுத்த அதானி நிறு வனம் முன்வந்துள்ளது. திருச்சியிலிருந்து துவ ரங்குறிச்சி வழியாக மதுரை வரை யிலான 124 கிலோ மீட்டர் நெடுஞ்சாலை யை, ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பராமரித்து வருகிறது. இந்நிலையில், இச்சாலையை பராமரிக்கும் பொறுப்பை தனியாருக்கு குத்தகைக்கு விட திட்டமிட்டுள்ள நெடுஞ்சாலை ஆணையம் கடந்த ஆண்டு டெண்டர் கோரியது. அதற்கான ஏலத்தில் அதானி ரோடு டிரான்ஸ் போர்ட், ஐஆர்பி இன்பிராஸ்ட்ரக்சர் டெவலப்பர்ஸ் லிமிடெட், எபிக் கன்ஸ்ட்ரக்ஷன், பிரகாஷ் அஸ்பால்டிங்ஸ் & டோல் ஹைவேஸ் (இந்தியா) லிமி டெட் ஆகிய நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் தான், திருச்சி - மதுரை சாலையை பராமரிப்பதுடன் சுங்கம் வசூலித்துக் கொள்ளும் உரிமையை பெறுவதற்காக அதானி நிறுவனம் ஒன்றிய அரசுக்கு ரூ. 1,692 கோடி செலுத்த முன்வந்துள்ளது. பிற நிறுவனங்களை காட்டி லும் அதானி நிறுவனம் அதிக தொகைக்கு ஒப்பந்தம் கோரி இருப்பதால் அடுத்த 20 ஆண்டு களுக்கு அந்த நெடுஞ்சாலை யை பராமரிக்கும் உரிமம் அதானி நிறுவனத்திற்கே வழ ங்கப்படலாம் எனத் தெரிகிறது. ஏற்கெனவே மதுரை - கன்னியாகுமரி இடையிலான 243 கிலோ மீட்டர் சாலை தனியார் மயமாக்கப்பட்டு கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இது தவிர திருச்சி - தஞ்சாவூர் இடையிலான 56.5 கிலோ மீட்டர் நீள நெடுஞ்சாலை, மதுரை - தூத்துக்குடி இடையிலான நெடுஞ் சாலை மற்றும் தூத்துக்குடி - திரு நெல்வேலி நெடுஞ்சாலையை குத்த கைக்கு விடுவதற்கான டெண்டரை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கோரியுள்ளது. இந்த வரிசையில் தற்போது 32.6 கி.மீ நீளமுள்ள சென்னை பைபாஸ் சாலையையும் தனியார்மயமாக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்ட மிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக் கின்றன.