மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது தமிழ்நாடு மாநில மாநாட்டில் மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பெ. சண்முகத்தை, எழுத்தாளர் சிகரம் ச. செந்தில்நாதன் மனைவியுடன் நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார். இரா. தெ.முத்து உடனிருந்தார். சென்னை கார்ப்பரேஷன் ஊழியர்கள் சங்கத்தின் (CPEU) சார்பில் அதன் நிர்வாகிகளும், தமிழ்நாடு குரும்பன்ஸ் பழங்குடி மக்கள் சங்கத்தின் (இணைப்பு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம்) மாநிலத் தலைவர்களும் பெ. சண்முகத்தை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.