3 கோடி ஸ்மார்ட் மீட்டருக்கு அரசு மீண்டும் டெண்டர்!
ரூ. 20 ஆயிரம் கோடி செலவில், 3.04 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் மீண்டும் டெண்டர் கோரி உள்ளது. மின்நுகர்வை துல்லியமாகக் கணக்கெடுப்பதற்கும்; மின் இழப்பைத் தடுப்பதற்கும் ஸ்மார்ட் மீட்டர் திட் டத்தை கட்டாயமாக்கி ஒன்றிய பாஜக அரசு உத்தரவு பிறப்பித்தது. 2026-ஆம் ஆண்டுக்குள் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு காலக்கெடு நிர்ணயித்துள் ளது. அதன்படி, மின் இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த ரூ. 19 ஆயிரத்து 992 கோடி செலவில், 3 கோடியே 4 லட்சத்து 86 ஆயிரத்து 617 ஸ்மார்ட் மீட்டர் களை கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் டெண்டர் கோரி உள் ளது. குறிப்பாக, சென்னை, வேலூர் மண்ட லத்தில் 49.43 லட்சம், கோவை, ஈரோடு மண்டலத்தில் 56.74 லட்சம் ஸ்மார்ட் மீட் டர்களும், காஞ்சிபுரம், விழுப்புரம் மண்ட லங்களில் 49.61 லட்சம் ஸ்மார்ட் மீட்டர் களும், கரூர், நெல்லை மண்டலங்களில் 49.98 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்களும், திருச்சி, தஞ்சாவூர் மண்டலங்களில் 49.86 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்களும், மதுரை, திரு வண்ணாமலை மண்டலங்களில் 49.77 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்களும் பொருத்தப் பட உள்ளன. 6 கட்டமாக ஸ்மார்ட் மீட்டர்களை நிறுவ இந்த முறை டெண்டர் கோரப்பட்டுள்ளது. ஏற்கனவே 4 கட்டமாக ஸ்மார்ட் மீட்டர் அமைப்பதற்கான டெண்டரை, அதானி குழுமம் பெற்றிருந்த நிலையில், அதனை ரத்து செய்த தமிழக அரசு தற்போது மீண் டும் டெண்டர் கோரியுள்ளது.