45 ஆண்டு கால விவசாயிகளின் கண்ணீருக்குத் தீர்வு பாரதியார் பல்கலைக்கழக நில இழப்பீடு வழங்க அரசாணை
கோயம்புத்தூர், மார்ச் 15 - கோவை பாரதியார் பல்கலைக் கழகத்திற்காகத் தங்கள் நிலங் களை வழங்கிய விவசாயி களுக்கு, சுமார் 45 ஆண்டுகால நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு உரிய இழப்பீடு வழங்கு வதற்கான அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தொடர் போராட்டங் களுக்குக் கிடைத்த இந்த மகத் தான வெற்றியை, பாதிக்கப்பட்ட விவசாயிகள் கல்வீரம்பாளையம் பகுதியில் இனிப்பு வழங்கி உற்சாகமாகக் கொண்டாடினர். அற்பமான விலையும் நீண்ட இழுபறியும் கடந்த 1979 முதல் 1986 வரை யிலான காலகட்டத்தில், பாரதி யார் பல்கலைக்கழகம் அமைப்ப தற்காக வடவள்ளி, சோமை யம்பாளையம் மற்றும் வீரபாண்டி ஆகிய கிராமங்களில் 924 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அப்போது ஒரு சென்ட் நிலத்திற்கு வெறும் 33 ரூபாய் முதல் 85 ரூபாய் வரை மட்டுமே அரசு நிர்ணயித்தது. இந்த அற்ப மான தொகையை ஏற்க மறுத்து, சிறு மற்றும் குறு விவசாயிகள் நீதி மன்றத்தை நாடினர். 2002-ல் நீதி மன்றம் விவசாயிகளுக்கு ஆதர வாகத் தீர்ப்பளித்த போதிலும், அரசு தொடர்ந்து மேல்முறையீடு செய்ததால் இந்த விவகாரம் பல தசாப்தங்களாகத் தீர்வின்றி இழுபறியிலேயே இருந்தது. செங்கொடி ஏந்திய சிபிஎம்-இன் சமரசமற்ற போராட்டம் விவசாயிகளின் இந்த நியாய மான கோரிக்கைக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும் சமரச மற்ற போராட்டங்களை முன்னெடுத் தன. *2013 முற்றுகைப் போ ராட்டம்: விவசாயிகள் சங்கத்தின் அன்றையத் தலைவர் பெ. சண்முகம் தலைமையில் ஆயிரக் கணக்கானோரைத் திரட்டி நடத்தப்பட்ட பல்கலைக்கழக முற்றுகைப் போராட்டத்தின் விளை வாக, அன்றைய அரசு ரூ.43 கோடி வட்டித் தொகையை விடுவித்தது. * 2025 காத்திருப்புப் போ ராட்டம்: நீண்ட இடைவெளிக்குப் பிறகு, கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் கட்சியின் மாநிலச் செய லாளர் பெ. சண்முகம் தலைமை யில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெரும் காத்திருப்புப் போராட்டம் நடை பெற்றது. இதன் தொடர்ச்சி யாகவே தற்போது அரசு இறுதி முடிவை எடுத்துள்ளது. அமைச்சர்கள் மற்றும் முதல மைச்சரைச் சந்திக்கும் போதெல் லாம் சிபிஎம் விடுத்த அழுத்தமான கோரிக்கையே இந்த அர சாணைக்கு வழிவகுத்துள்ளது. பல்கலைக்கழகத்தின் 195 ஏக்கர் நிலத்தை ‘டிட்கோ’ நிறுவனத் திற்கு வழங்கி, அதன் மூலம் கிடைக்கும் ₹164 கோடி ரூபாயை விவசாயிகளுக்கு வழங்க அரசு தற்போது அரசாணை வெளி யிட்டுள்ளது. முழுமையான தீர்வுக்காக அடுத்தகட்ட நடவடிக்கை இதுகுறித்து கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் சி. பத்மநாபன் கூறுகையில், “45 ஆண்டுகாலத் துயரத்தில் இருந்த மக்களுக்கு இந்த அறி விப்பு பெரும் மகிழ்ச்சியைத் தந்து உள்ளது. தேர்தல் நெருங்கும் வேளையிலும் விவசாயிகளின் துயரை உணர்ந்து செயல்பட்ட முதலமைச்சருக்கும், போராட்டங் களை முன்னெடுத்த நிர்வாகி களுக்கும் நன்றிகளைத் தெரி வித்துக் கொள்கிறோம். இருப்பி னும், அரசு கணக்கிட்டுள்ள வட்டி முறைகளில் சில சந்தே கங்கள் நீடிக்கின்றன. நீதிமன்றத் தீர்ப்பின்படி முறை யான வட்டி வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து மாவட்ட ஆட்சி யரை நேரில் சந்தித்து விளக்கம் கேட்க உள்ளோம். ஏதேனும் குறைகள் இருப்பின் அதனை முறைப்படி முறையீடு செய் வோம்” எனத் தெரிவித்தார். சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்த ஒரு வாழ்வாதாரப் பிரச்சினைக் குச் செங்கொடி இயக்கத்தின் விடா முயற்சியால் விடிவு கிடைத்து உள்ளது கோவை மக்களி டையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
