tamilnadu

img

விளையாட்டு...

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்

முன்னெப்போதும் இல்லாத வகையில் நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் 5 முறை சாம்பியனான சென்னை அணி மிக மோசமான அளவில் திணறி வருகிறது. இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 1இல் மட்டும் வெற்றி பெற்று சென்னை அணி 9ஆவது இடத்தில் உள்ளது. இந்நிலையில், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள், வீட்டை கூட எழுதி தருகிறேன் என சென்னை ரசிகர் ஒருவர் சமூகவலைத்தளங்களில் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் கூறு கையில்,”சென்னை அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பே கொடுப்பதில்லை. சென்னை அணியில் ரஷீத் (ஆந்திரா) என்ற ஒரு வீரர் இருக்கிறார். அவர் அல்டிமேட் ஆக விளையாடுவார். நிஜமாகச் சொல்கிறேன், அவருக்கு இரண்டு போட்டிகளில் வாய்ப்பு கொடுங்கள். அந்தப் போட்டிகளில் ரஷீத் 30 ரன்களுக்கு மேல் அடிக்கவில்லை என்றால், என்னுடைய வீட்டையே நான் சென்னை அணியின் பெயருக்கு எழுதித் தருகிறேன். நான் இதை ருதுராஜுக்கு ஆங்கிலத்தில் சொல்கிறேன்” என அவர் கூறியுள்ளார். (குறிப்பு : ரசிகர்கள் இடையே  மோதல் ஏற்படும் என்பதால்  பெயர் வெளியிடவில்லை)

இளம் வயதிலேயே ஓய்வு பெற்ற வில் புக்கோவ்ஸ்கி

ஆஸ்திரேலியாவில் முதல்தர கிரிக் கெட் போட்டிக ளில் சிறப்பாக விளையாடி வந்த வில் புக்கோவ்ஸ்கி (27) ஆஸ்திரேலிய அணியின் எதிர்கால நம்பிக்கை நட்சத்தி ரமாக கருதப்பட்டார். டிராவிட் போல நிதானமான ஆட் டத்தை வெளிப்படுத்தி விக்டோ ரியா அணிக்காக 2 இரட்டை சதங்கள் அடித்ததால், 2021 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் அணியில் புக்கோவ்ஸ்கி தேர்வு செய்யப் பட்டார்.  ஆனால் இந்தியா-ஆஸ்தி ரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று நாள் பயிற்சி ஆட்டத்தின்போது, இந்திய வீரர் கார்த்திக் தியாகி வீசிய பந்து வில் புக்கோவ்ஸ்கி தலையில் பயங்கரமாக தாக்கி யது. இதில் பலத்த காயம டைந்த அவர் மைதானத்தில் அப்படியே நிலைகுலைந்தார். 2 ஆண்டு தீவிர சிகிச்சை மேற்கொண்ட பின்பு கடந்த ஆண்டு இயல்பான நிலைக்கு திரும்பிய நிலையில், மீண்டும் கிரிக்கெட் விளையாட தொ டங்கினார். ஆனால் எதிர்பாரா விதமாக 2024ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஷெபீல்ட் ஷீல்ட் தொடரில் மெரிடித் வீசிய பவுன்சர் பந்து வில் புக் கோவ்ஸ்கியின் தலையில்  தாக்கியது. இதில் அவர்  மீண்டும் பலத்த காயம டைந்தார். மூளை அதிர்ச்சி ஏற் பட்டதால் அவரால் சாதாரண பயிற்சியை கூட தொடங்க முடியவில்லை. இதனால் மருத்துவர்களின் ஆலோச னைப்படி வில் புக்கோவ்ஸ்கி நிரந்தரமாக கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தொடர்ச்சியான பவுன்சர் தாக்குதலால் வெறும் 27 வயதிலேயே வில் புக்கோவ் ஸ்கி  நிரந்தரமாக ஓய்வு அறி வித்து இருப்பது கிரிக்கெட் உலகில் கடும் அதிர்ச்சி அலை யை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து அணியின்  நிரந்தர கேப்டனாகிறார் ஹாரி

சமீபத்தில் நிறைவு பெற்ற மினி உலகக்கோப்பை கிரிக் கெட் தொடரில் இங்கிலாந்து அணி லீக் சுற்றோடு வெளியேறியது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று இங்கி லாந்து அணியின் வெள்ளைப் பந்து (ஒருநாள், டி-20) கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார் ஜோஸ் பட்லர். இங்கிலாந்து அணியின் டெஸ்ட் பிரிவுக்கு ஸ்டோக்ஸ் கேப்டனாக உள்ள நிலையில், வெள்ளைப் பந்து பிரிவு கேப்டனாக ஹாரி புரூக்கை நிரந்தரமாக நியமிக்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஹாரி புரூக் ஏற்கெனவே பட்லர் காயம் காரணமாக விலகிய போது வெள்ளைப் பந்து கேப்டனாக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.