https://www.facebook.com/ComradeSRY/
https://twitter.com/SitaramYechury
இந்தியாவில் 10% பணக் காரர்கள் தேசத்தின் 50% சொத்துகளுக்கு அதிபதி களாக உள்ளனர் என தேசிய மாதிரி ஆய்வு வெளிப்படுத்தி யுள்ளது.
“பணக்காரர்களை மெகா பணக்காரர்களாக்கு!
ஏழைகளை ஓட்டாண்டி களாக்கு!”
இதுதான் மோடியின் வெற்றுச் சவடால் (ஜும்லா) பொருளா தாரம்! தேச வளங்களும் மக்க ளின் செல்வமும் கொள்ளை யடிக்கப்படுகிறது. பொருளா தாரத்தை அழிக்கும் இந்த செயலை நிறுத்துங்கள். பணக் காரர்கள் மீது செல்வ வரி களை போடுங்கள்.
இது கிரிமினல் குற்றம்!
60,000க்கும் அதிக மான குடும்பங்கள் பெருந் தொற்று காலத்தில் தமது வாழ்விடங்களிலிருந்து அதி காரத்தில் உள்ளவர்களால் விரட்டப்பட்டுள்ளனர். இது உயிர் வாழ்வதற்கான அடிப்படி உரிமை மற்றும் மனித உரிமை களுக்கு எதிரானது. இன்னும் மோசமான கொடுமை என்னவெனில் 9% பேர்தான் நட்ட ஈடுபெறும் பட்டியலில் இணைக்கப் பட்டனர். 2% பேர் சிறு தொகை யும் 1.5% பேர் மட்டுமே ஓரளவு நட்ட ஈடும் பெற்றனர்.
மாற்று கருத்துகளை முன்வைப்பவர் களுக்கு எதிராக நடக்கும் வரு மான வரி ரெய்டுகளுக்கு “வரு மான வரி சர்வே” எனவும் தனி யார்மயத்தை “பணமாக் கல்” எனவும் புதிய நாமகர ணங்களை மோடி அரசாங் கம் சூட்டி வருகிறது. இவை யெல்லாம் வாய்ப்பந்தல் கள்தான்! வெற்றுஜாலமே மோடி அரசாங்கத்தின் மைய மான அம்சம். உண்மை என்னவெனில் இந்த கூட்டுக் களவாணிகள் அதீத பகற்கொள்ளை அடிக்கும் அதே வேளையில் 99% இந்தியர்கள் இருண்ட நர கத்துக்குள் தள்ளப்படுகின்ற னர்.
உ.பி.யில் பல மாவட்டங் களில் டெங்கு நோயா ளிகள் அதிகரிப்பு! பெரும்பா லும் குழந்தைகள் உயிரிழப்பு! மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல் மக்கள் அவதி! கோவிட் பெருந்தொற்று பேரழிவிலிருந்து எந்த படிப்பினையும் கற்க வில்லை. தேவையான சிகிச்சை யும் பராமரிப்பும் தருவ தற்கு பதிலாக உ.பி. முதல்வர் மத நஞ்சை திணிப்பதில்தான் முனைப்பு காட்டுகிறார். மதப்பிளவை முன்வைக்கும் பிரதமரும் மத வேற்றுமை களை எதிர்த்த தலைவர்களின் சிலைகளை திறந்து வைத்து அவர்களின் பாரம்பரியத்தை ஆக்கிரமிக்க முயல்கிறார்.
மோடி அரசாங்கத்தின் பொய்யுரையும் வாய்ப்பந்தலும் இந்தியா வில்தான் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் அமலாக்கப் படுவதாக நம்மை நம்பச் சொல்கிறது. ஆனால் உண்மை யில் உலக அளவில் தடுப்பூசி திட்டத்தில் நாம் தொலைவில் நிற்கிறோம். தரவுகளில் தில்லு முல்லு செய்வதை நிறுத்தி விட்டு மூன்றாவது அலையை தடுக்க தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்துங்கள்.