மதுரை:
கொரோனா காலத்தில் மதுரை யில் இலவசமாகப் பயணிகளை அழைத்துச் செல் லும் ஆட்டோ ஓட்டு நரை முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.
மதுரை மேல அனுப்பானடி பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் குருராஜ். இவர் கொரோனா முதல் அலையின்போதே மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்குதல், நோய் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிக ளுக்குச் சென்று காய்கறிகள் வழங்குதல், நியாயவிலைக் கடை பொருட்களை எடுத்துச்சென்று வழங்குதல் உள்ளிட்ட பணிகளில் தன்னார்வலராக ஈடுபட்டு வந்தார்.இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில், தன் ஆட்டோவை அவசர காலத் தேவைக்கு மக்கள் இலவசமாகப் பயணிக்கும் வகையில் மாற்றியுள்ளார்.மாவட்ட நிர்வாகத்ததின் அனுமதி பெற்று அதற்கான அடையாள அட்டை யோடு பயணிக்கும் குருராஜ், ஊரடங்கு நேரத்தில் உடல்நலக் குறைவால் மருத்துவ மனைக்குச் செல்லக்கூடிய நபர்களுக்கும், பேருந்து நிறுத்தம், ரயில் நிறுத்தங்களில் காத்திருக்கும் பயணிகளை அழைத்துச் செல்வதற்கும் தனது ஆட்டோவை இலவச மாக வழங்குகிறார்.
மேலும், ஒருசில கொரோனா நோயாளி களை அவசர மற்றும் நெருக்கடி நேரத்தில் ஆட்டோவில் அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்.இவருடைய இந்தப் பணியைப் மக்கள் பலரும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில், ஆட்டோ ஓட்டுநர் குருராஜை முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டி வெள்ளியன்று அவருக்குக் கடிதம் அனுப்பியிருந்தார்.
அந்தக் கடி தத்தில் “மதுரை அனுப்பான டியில் ஆட்டோ ஓட்டு நராக உள்ளதங்களின் தொடர்ச்சியான மக்கள் சேவை பாராட்டுக்குரியது. கொரோனா முதல்அலையின் போதும், தற்போது மிகக் கடுமையான தாக்கத்தை ஏற்ப டுத்தி வரும் இரண்டாவது அலையிலும் தங்களின் ஆட்டோ மூலம் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களையும், பிற நோயாளி களையும், மருத்துவமனைக்குக் கட்டணம் ஏதுமின்றி அழைத்துச் சென்று உயிர் காக்கும் உன்னதமான பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதை அறிந்து மகிழ்கிறேன்.
ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்று, நோயாளிகளையும், ரயில் பயணிகளையும் இலவசமாக அழைத்துச் செல்லும் தன்னார்வலராகத் தாங்கள் மேற்கொண்டுள்ள பணி போற்றுதலுக்குரியது. தங்கள் பணியால் ஈர்க்கப்பட்டு இப்பணியில் ஈடுபட்டுள்ள தங்கள் நண்பர் அன்புநாதனும் பாராட்டுக் குரியவர்.பேரிடர் காலம் எனும் போர்க்களத்தில் தமிழக அரசு மேற்கொண்டுள்ள போர்க் கால நடவடிக்கைகளுக்குத் துணை நிற்கும் வகையில் தாங்கள் மேற்கொண்டுள்ள சேவையை அரசின் சார்பில் பாராட்டு கிறேன்”. எனக் குறிப்பிட்டுள்ளார்.முதல்வர் மு.க.ஸ்டாலினின் பாராட்டுக் கடிதத்தை மதுரை செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன்பாண்டியன் உள்ளிட்ட அலுவலர்கள் குருராஜை நேரில் சந்தித்து வழங்கி, தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.