நியூயார்க் சிறையில் அடைப்பு மதுரோவை விடுதலை செய்!
அமெ. ஏகாதிபத்தியத்தைக் கண்டித்து உலகம் முழுவதும் ஆவேசம்
நியூயார்க்/காரகாஸ், ஜன. 4 - லத்தீன் அமெரிக்காவின் இறையாண்மையை காலில் போட்டு மிதிக்கும் வகையில், வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கப் படைகள் அதிரடியாகக் கடத்திச் சென்று நியூயார்க் சிறையில் அடைத்துள்ளன. சர்வதேச சட்டங்களை மதிக்காமல் ஒரு நாட்டின் தலைவரை “கைது” என்ற பெயரில் கடத்தி யுள்ள டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசின் செயலுக்கு எதிராகவும், மசூராவை உடனே விடுதலை செய் என்றும் உலகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. நள்ளிரவில் ராணுவத் தாக்குதல் ஜனவரி 2 வெள்ளிக்கிழமை இரவு 11:46 மணியள வில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பின் நேரடி உத்தரவின் பேரில் “ஆபரேஷன் அப்சல்யூட் ரிசால்வ்” எனும் ராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டது. சுமார் 150 போர் விமானங்கள் மற்றும் 20 ராணுவ தளங் களைப் பயன்படுத்தி வெனிசுலாவின் வான் பாதுகாப்பு அமைப்புகளை அமெரிக்கா செயலிழக்கச் செய்தது. சனிக் கிழமை அதிகாலை 2:01 மணியளவில் காரகஸ்ஸில் உள்ள மதுரோவின் குடியிருப்பைச் சூழ்ந்த அமெரிக்க ஹெலி காப்டர் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தி மதுரோவையும் அவரது மனைவியையும் சிறைபிடித்தன. பின்னர் அவர்கள் ஒரு அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பலுக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் நியூயார்க்கிற்கு கொண்டு வரப்பட்டனர். தற்போது மதுரோ நியூயார்க்கின் புரூக்ளினில் உள்ள பெருநகர தடுப்புக் காவல் மையத்தில் அடைக்கப்பட்டுள் ளார். ஒரு நாட்டின் ஜனாதிபதியை சாம்பல் நிற ட்ராக் சூட் அணிவித்து, கண்களைக் கட்டி கொண்டு சென்றபுகைப்படத்தை டிரம்ப் சமூகவலைத்தளத் தில் பகிர்ந்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. “வெனிசுலாவை நாங்களே ஆள்வோம்” : டிரம்ப் இந்தச் செயலை நியாயப்படுத்திப் பேசிய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், “இனி வெனிசுலாவை அமெரிக்கா தான் நடத்தும்” என்று அறிவித்துள்ளார். வெனிசுலாவின் பரந்த எண்ணெய் வளங்களைக் கைப்பற்றி அதை அமெரிக்காவின் நலனுக்காகப் பயன்படுத்தப் போவதாகவும் அவர் வெளிப் படையாகக் கூறியது, இது முழுக்க முழுக்க ஒரு “எண்ணெய் கொள்ளை” என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. சீனா, ரஷ்யா கடும் கண்டனம் அமெரிக்காவின் இந்த அராஜகப் போக்கிற்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பு கள் கிளம்பியுள்ளன. சீன வெளியுறவு அமைச் சகம், “இது சர்வதேச சட்டங்களின் அப்பட்ட மான மீறல். ஒரு நாட்டின் தலைவரை அவ ரது நாட்டிற்குள்ளேயே அத்துமீறி நுழைந்து கடத்துவது ஐநா சாசனத்திற்கு எதிரானது. மதுரோவையும் அவரது மனைவியையும் நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” என எச்சரித்துள்ளது. ரஷ்யா மற்றும் தென்கொரியா, பிராந்திய அமைதியைக் குலைக்கும் இத்தகைய ராணுவ நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை மூலம் ஜனநாயகத்தை நிலை நாட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளன. ஐநா பாதுகாப்பு சபையில் இது குறித்து அவசர விவாதம் கோரப்பட்டுள்ளது. அமெரிக்காவிலேயே வெடித்த போராட்டம் ஆச்சரியப்படும் விதமாக அமெரிக்கா வின் அனைத்து முக்கிய நகரங்களிலும் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன. வாஷிங்டன் டி.சி.யில் வெள்ளை மாளி கைக்கு வெளியே திரண்ட நூற்றுக்கணக் கான போராட்டக்காரர்கள் “மதுரோவைக் கடத்தியது சட்டவிரோதம்”, “எண் ணெய்க்காகப் போர் தொடுக்காதே” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டனர். நியூயார்க்கில் மதுரோ அடைக்கப்பட்டுள்ள சிறைக்கு அருகிலும் டைம்ஸ் சதுக்கத்திலும் மக்கள் திரண்டு “அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒழியட்டும்” என முழங்கினர். லாஸ் ஏஞ்சல்ஸில் கடும் மழை யையும் பொருட்படுத்தாமல் திரண்ட மக்கள் “வெனிசுலா மீது குண்டு வீசுவதை நிறுத்து” என்று கோரிக்கை விடுத்தனர். அமெரிக்காவின் ஒரு பகுதி ஆதரவாளர் கள் இதை “வெற்றி” எனக் கொண்டாடினா லும், மார்ஜோரி டெய்லர் கிரீன் மற்றும் ரேண்ட் பால் போன்ற அரசியல் தலைவர்க ளே இது அமெரிக்காவின் வரிப்பணத்தை வீணடிக்கும் தேவையற்ற போர் நட வடிக்கை என விமர்சித்துள்ளனர். வெனிசுலாவில் பேரழிவு அமெரிக்காவின் வான்வழித் தாக்கு தலில் வெனிசுலாவின் ‘லா குவைரா’ துறை முகம் மிக மோசமாகப் பாதிக்கப் பட்டுள்ளது. குடியிருப்புப் பகுதிகள் மற்றும் சேமிப்புக் கிடங்குகள் தரைமட்டமாக்கப் பட்டுள்ளன. “என் வாழ்நாளில் இப்படி ஒரு பயங்கரத்தை நான் பார்த்ததில்லை” என அங்குள்ள மக்கள் கண்ணீர் மல்கக் கூறு கின்றனர். எல்லையோரப் பகுதிகள் மூடப் பட்டுள்ளதால் லத்தீன் அமெரிக்க நாடு களில் பெரும் அகதிகள் நெருக்கடி ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. மதுரோவை விடுவிக்கக் கோரி லத்தீன் அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் தீவி ரமடைந்து வரும் நிலையில், அடுத்த சில வாரங்கள் உலக அமைதிக்கு மிக முக்கிய மானதாகக் கருதப்படுகிறது. அமெரிக்கா தனது பிடியை இறுக்கினாலும் உலக நாடு களின் அழுத்தம் காரணமாக மதுரோவை விடு விக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
