நாகர்கோவில், ஜூன் 19- குமரி மாவட்டத்தில் இருந்து சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் பலர் வேலைக்காகவும், உயர் படிப்புக்காகவும் சென்றுள்ள னர். கோவிட்-19 தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஊர டங்கு அமல்படுத்தப்பட் டுள்ள நிலையில் வேலை யில்லாததாலும், வருமான மின்றியும், தங்கியுள்ள வீட்டி ற்கு வாடகை கட்ட முடியா மலும், உணவின்றியும் இவர்கள் தவித்து வருகின்ற னர். இவர்கள் இங்கிருந்து தங்கள் சொந்த ஊருக்கு பாதுகாப்பாக செல்ல அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நி லையில் பலர் எப்படியாவது தங்கள் சொந்த ஊருக்கு சென்றால் பிழைத்து கொள்ளலாம் என அரசின் இ-பாஸ் இல்லாமலேயே குறுக்கு வழிகளில் குமரி மாவட்டத்துக்குள் நுழைவது அதிகரித்து வருகிறது. சென்னையில் வாழ்ந்து வரும் குமரி மாவட்ட மக்களை உரிய அனுமதி யின்றி குமரி மாவட்டத்திற் குள் அழைத்து வரும் சம்ப வங்கள் அதிகரித்துள்ள நிலையில், குமரி மாவட்ட எல்லைகளான ஆரல்வாய் மொழி மற்றும் அஞ்சுகிராமம் சோதனைச்சாவடிகளில் காவல் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் நெல்லை மாவட்ட எல்லையில் இருந்து பயணிகளை ஏற்றி கொண்டு அஞ்சுகிராமம் சோதனைச்சாவடி வழியாக குமரி மாவட்டத்திற்குள் நுழைய முயன்ற உள்ளூர் ஆட்டோ ஒன்றினை நிறுத்தி காவல் துறையினர் விசா ரணை நடத்தினர். அப்போது ஆட்டோவில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதனால் சந்தேக மடைந்த காவல் துறை யினர் அவர்களை பிடித்து விசாரித்ததில், ஆட்டோவில் இருந்த நான்கு பயணிகளும் இ-பாஸ் இல்லாமல் சென்னையில் இருந்து கார் மூலமாக குமரி - நெல்லை எல்லையான அஞ்சுகிராமம் சோதனைச்சாவடி வரை வந்ததும், பின்னர் ஏஜென்டு மூலமாக உள்ளூர் ஆட்டோ வில் ஏறி குமரி மாவட்டத்தில் நுழைய முயன்றதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து சென்னையில் இருந்து இ - பாஸ் இல்லாமல் வந்த நான்கு பயணிகளும் சுகாதாரத் துறையினரிடம் ஒப்படைக் கப்பட்டனர். அவர்கள் கோவிட் 19 பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனி மைப்படுத்தப்பட்டனர். மேலும் சட்டவிரோதமாக குமரி மாவட்டத்திற்குள் நுழைய உதவிய லெவிஞ்சி புரம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கணேஷ் கைது செய்யப்பட்டார். அவ ரது ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது.