tamilnadu

img

விருதுநகரில் சிஐடியு மாவட்டக்குழு அலுவலக கட்டட அடிக்கல் நாட்டு விழா

விருதுநகரில் சிஐடியு மாவட்டக்குழு அலுவலக கட்டட அடிக்கல் நாட்டு விழா

ஒரே நாளில் ரூ.10 இலட்சம் வாரி வழங்கிய தொழிலாளர்கள்

விருதுநகர், மே 9- விருதுநகரில் சிவகாசி சாலை யில் சிஐடியு மாவட்டக்குழு அலு வலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா மே 8 வியாழக்கிழ மையன்று  நடைபெற்றது. இந் நிகழ்ச்சியின் போது தாமாக முன்  வந்து ஒரே நாளில் ரூ.10 இலட் சத்தை தொழிலாளர்கள் வாரி வழங்கினர். விருதுநகரில் சிஐடியு மாவட் டக்குழு அலுவலகம் செயல்பட்டு வந்தது. அதில், கடந்த சில மாதங்க ளுக்கு முன்பு எதிர்பாராத வித மாக தீ விபத்து நேர்ந்தது.  இத னால் அக்கட்டடத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், அதே இடத் தில், புதிய அலுவலகத்தை தோழர் ஜே.ஹேமச்சந்திரன் நினைவாக கட்டுவது என சிஐடியு மாவட் டக்குழு முடிவு செய்தது. இந்நிலையில், மகத்தான  தலைவர் தோழர் வி.பி.சிந்தன் நினைவு தினத்தன்று மாவட்டக் குழு அலுவலகத்திற்கான அடிக் கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலை வர் எம்.மகாலெட்சுமி தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பி னர் ஆர்.பாலசுப்பிரமணியன் வரவேற்புரையாற்றினார். கட்டடப்பணிக்கான திட்ட அறிக்கையை மாவட்டச் செய லாளர் பி.என்.தேவா முன்மொழிந் தார். மாநிலத் தலைவர் அ.சவுந்தர ராசன், மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் ஆகியோர் அடிக்கல் நாட்டி சிறப்புரையாற்றினர். மாவட்ட பொருளாளர் வி.ஆர்.செல்லச்சாமி நன்றி கூறினார். மேலும் இதில், மாநில உதவித் தலைவர் ஆர்.எஸ்.செண்பகம், சிபிஎம் மாவட்ட செயலாளர் ஏ. குருசாமி, சிஐடியு நிர்வாகிகள் பி.ராமர், எம்.சாராள், ஆர் .பால சுப்பிரமணியன், எம்.அசோகன்,  கே. விஜயகுமார், எம். திருமலை, வி. பாண்டியம்மாள், வி. சந்திரன், எம்..சுரேஷ் குமார், கே.முருகன், எம். கார்மேகம், ஆர். முனியா ண்டி, வி. சந்தானம், எம்.சி.பாண்டி யன்,எம்.பிச்சை கனி, ஆர்.சோம சுந்தரம், மூத்ததலைவர்கள் ஜி. வேலுச்சாமி, எஸ். பாலசுப்பிரமணி யன் ஆகியோர் கலந்து கொண்டனர் மேலும்,    முதல் கட்ட கட்டட நிதியாக சங்கங்கள் சார்பில் ரூ. 2.5 இலட்சம் தலைவரிடம் வழங் கப்பட்டது, இதில் மின் ஊழியர் மத்திய அமைப்பு ரூ.50ஆயிரம்,  கட்டுமானத் தொழிலாளர் சங்கம் ரூ. 30ஆயிரம்,  கூட்டுறவு ஊழியர் சங்கம் ரூ.20ஆயிரம், விசைத்தறி தொழிலாளர் சங்கம் ரூ.20ஆயிரம்,  ஆட்டோ தொழிலாளர் சங்கம் ரூ.15ஆயிரம், உடல் உழைப்பு தொழிலாளர் சங்கம் ரூ.13ஆயி ரம், அங்கன்வாடி ஊழியர்- உதவி யாளர் சங்கம் ரூ.10ஆயிரம், சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் ரூ.20ஆயிரம்,  தையல் தொழிலாளர் சங்கம், முடி திருத்து வோர் சங்கம் தலா ரூ. 10ஆயிரம்,  கைத்தறி தொழிலாளர் சங்கம், விருதுநகர் நகராட்சி ஊழியர் சங்கம் தலா ரூ. 5ஆயிரம்,   மாவட்ட நிர்வாகி  எம்.கார்மே கம் ரூ.25ஆயிரம், மூத்த தலைவர் ஓய்வு பெறோர் நல அமைப்பின் மாவட்டத் தலைவர் ஜி.வேலுச் சாமி,  திருமலை- ரேணுகாதேவி குடும்பம்,  மாவட்டக்குழு உறுப்பி னர் அழகு ஜோதி,  தோழர்  பால சுப்பு ஆகியோர் தலா ரூ.5 ஆயிரம் வழங்கினர்.  மேலும் பல சங்கங்களின் நிர்வாகிகள் நிதி வழங்குவதாக  உறுதியளித்தனர். அடிக்கல் நாட்டு விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.