மதுரை, ஜூலை 9- கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சுமைப்பணித் தொழிலாளர்களுக்கு மதுரை மாநகர் சுமைப்பணி தொழிலாளர் சங்கம் (சிஐடியு) பொன்மேனி, காளவாசல் உள்ள சுமைப்பணி தொழிலாளர் சங்கம் சார்பில் தொழிலாளர்களுக்கு பத்து கிலோ அரிசி வீதம் 80 பேருக்கும், நிவாரண நிதியாக ரூ.8ஆயிரம் வழங்கப்பட்டது. நிகழ்வில் பொரி பி. சண்முகத்தின் சரவணகுமார் பில்டிங் கன்ஸ்ட்ரக்சன் நிறு வனத்தினர், சுமைப்பணி சங்க மாவட்டப் பொதுச் செயலாளர் மா.கணேசன், மாவட்ட பொருளா ளர் ஆர். பாண்டி, சிஐடியு மாவட் டக் குழு உறுப்பினர் எம். சேகர் பாண்டி, செயலாளர் விஜயன், பொருளாளர் சுரேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.