மக்கள் இசைப் பாடகர் கரிசல்குயில் கிருஷ்ணசாமி காலமானார்
சிபிஎம், தமுஎகச, பல்வேறு அமைப்பினர் அஞ்சலி
விருதுநகர், ஏப். 11- தனது இனிய குரல் வளத்தால் தமிழகமெங்கும் மக்களால் கவரப்பட்ட பாட கர் கரிசல் குயில் கிருஷ்ண சாமி அவரது சொந்த கிரா மத்தில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 67. விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை தாலுகா, நரிகுளம் கிராமத்தில் ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்தவர் பாடகர் கிருஷ்ண சாமி அவர்கள். தற்போது அஞ்சல் துறையில் பணி யாற்றி ஓய்வு பெற்றவர். பொதுவுடமைகளின் பாடகர் கரிசல் குயில் இசைக் குழு மூலம் இடதுசாரி மற்றும் தமுஎகச போன்ற முற்போக்கு மேடைகளில் உழைக்கும் மக்களின் பாடு களை பாடல்களாக பாடிய வர் 1985 முதல் 40 ஆண்டுக ளாக தமிழகம் முழுவதிலும் உள்ள இடதுசாரி மேடைக ளில் அவரது குரல் ஒலித்துக் கொண்டே இருந்தது. தற்போது மதுரையில் நடை பெற்று முடிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாட்டிலும் அவரது குரல் ஒலித்தது என்பது குறிப்பி டத்தக்கது. சாஸ்திரிய சங்கீத விற்ப னர்கள் கூட அதிசயிக்கும் அளவுக்கு செவ்வியல் இசையில் தேர்ந்திருந்தார். கவிஞர்களின் எழுத்துக்களுக்கு உயிரோட்டம் கொடுத்தவர் கவிஞர்கள் பரிணாமன், நவகவி, ரமணன், வையம் பட்டி முத்துச்சாமி, ஏகாதசி, பிரளயன் ஆகியோரின் கவிதைகளுக்கு உயிர் கொ டுத்தவர். டாக்டர்.கே.ஏ.குண சேகரன் பட்டறையில் மெரு கூட்டப்பட்டவர். கரிசல்குயில் பாடல்கள் 1980 -1990 காலகட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள கிராமத்து இளைஞர்களின் மனதை ஆட்டிப் படைத்தது. அவரது குரலின் பாவமும், உணர்வும், நெஞ்சைத் தொட்ட பாடல்களாகவே அமைந்தன. அவரது குரலின் பாடலுக்கு அவரே இணை என்றும் கூறலாம். கவிஞர் பிரளயன் எழுதிய “ஊரடங்கும் சாமத்திலே” மற்றும் “இலைகள் அழுத ஒரு மலை இரவு” போன்ற பாடல்களை உணர்ச்சிமிக்க குரலில் பாடுவதில் மிகச் சிறந்த பாடகர் ஆவார். பாட கர் கரிசல் குயிலின் மறைவு பொதுவுடமை இயக்கத் திற்கு ஒரு பேரிழப்பாகும். தலைவர்கள் அஞ்சலி பாடகர் கிருஷ்ணசாமி யின் உடலுக்கு சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் ஆர்.கருமலையான், மாநி லக்குழு உறுப்பினர் கே.ஜி பாஸ்கரன், தமுஎகச மூத்த தலைவர்-எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன், தமுஎகச மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் லட்சுமிகாந்தன், வழக்கறிஞர் ரவீந்திரன், சிபிஎம் நெல்லை மாவட்ட செயலாளர் ஸ்ரீ ராம், சிபிஎம் விருதுநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாரி யப்பன், பாளையங் கோட்டை செயலாளர் மது பால், விவசாயிகள் சங்க தென்காசி மாவட்டத் தலை வர் வேணுகோபால், தென் காசி தமுஎகச மாவட்டத் தலைவர் மதியழகன், சிபிஎம் வாசுதேவநல்லூர் ஒன்றிய செயலாளர் நட ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி னர். இறுதி நிகழ்ச்சி ஏப்ரல் 13 அன்று நடைபெறுகிறது.