tamilnadu

img

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தம்

தூத்துக்குடி, மார்ச் 19- பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தூத்துக் குடியில் விசைப்படகு மீன வர்கள் 14 ஆவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத் தில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 245 விசைப்படகுகள் உள்ளன. இந்த விசைப்படகு மீனவர் கள் தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்கு முறை சட்டத்தின்படி, காலை 5 மணிக்கு கடலுக்கு சென்று விட்டு இரவு 9 மணிக்கு கரை திரும்புகிறார்கள். இவ்வாறு சென்று வரும்போது குறை வாக மீன்கள் கிடைப்பதால் பெரும் நஷ்டம் ஏற்படுவ தாக கூறப்படுகிறது. எனவே விசைப்படகு மீனவர்களுக்கு 48 மணி நேரம் தங்குகடல் தொழில் செய்ய அனுமதி வழங்க வேண்டும். அல்லது ஜூன் 15 ஆம் தேதி முதல் நவம்பர் மாத கடைசி வரை வழக்கம் போல் கடலுக்கு சென்று இரவு 12 மணி வரை மீன்பிடிக்க அனுமதி வழங்க வேண்டும். 

டிசம்பர் முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை ஒருநாள் விட்டு ஒருநாள், ஒருபகல், ஒரு இரவு மீன்பிடிக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலி யுறுத்தி விசைப்படகு மீனவர் கள் வேலைநிறுத்த போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்ற னர். இதைத்தொடர்ந்து சார் ஆட்சியர் சிம்ரான்ஜீத்சிங் கலோன் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் நாட்டுப்படகு, விசைப் படகு மீனவர்களை தனித்தனி யாக அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார். பின்னர் இதுதொடர்பான வழக்கு இருப்பதால், நீதி மன்றம் மூலம் இறுதி முடிவை பெறுமாறு அறிவுறுத்தப் பட்டது. இதனால் பேச்சு வார்த்தையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் வியாழனன்று 14 ஆவது நாளாக விசைப் படகு மீனவர்கள் கடலு க்கு செல்லாமல் போராட்டத் தில் ஈடுபட்டனர். இதனால் விசைப்படகுகள் அனைத் தும் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.