மதுரை, ஏப். 11-திமுக தலைமையிலான மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணியின் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து கூட்டணி கட்சிகளின் சார்பாக அனல் தெறிக்கும் பிரச்சாரங்கள் பல்வேறு வடிவங்களில் நடைபெற்று வருகிறது. மக்களின் மனதில் சு.வெங்கடேசனின் சின்னமான அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் வெகுவாக சென்றடைந்துள்ளது.இந்தப் பின்னணியில் பிஜேபியை சார்ந்தமாநிலச் செயலாளர்களில் ஒருவரான ஆர்.சீனிவாசன் மற்றும் பிங்க் சந்துரு என்ற பெயரில் முகநூலிலும் வெங்கடேசனின் வெற்றி வாய்ப்புக்களைக் கண்டு பொறுக்காமல் அவதூறு செய்திகளால் சகதிவாரி தூற்றி வருகிறார்கள். பாஜகவின் மாநிலச் செயலாளர்களில் ஒருவரான ஆர்.சீனிவாசன் என்பவர் கோவிலுக்குப் போகும் பெண்கள் குறித்து சு.வெங்கடேசன் பேசாத விஷயங்களை பேசியதாக அவதூறாககூட்டங்களில் பேசி வருகிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொடுத்த புகாரின் பேரில் அவர் மீது மதுரை அவனியாபுரம் காவல் நிலையத்தில் ஐ.பி.சி. 171 (ஜி)ல் எப்.ஐ.ஆர். (எண் 346 / 09.04.2019) போடப்பட்டுள்ளது. அதேபோன்று பிங்க் சந்துரு மீது மதுரைநகர் சி.சி.வி. காவல்நிலையத்தில் மற்றுமொருஎப்.ஐ.ஆர்.(எண் 14/09.04.2019) போடப்பட்டுள்ளது. தேர்தல் நாளான வருகிற18ம் தேதி அன்று சித்திரை திருவிழா வின் ஒருபகுதியாக தேரோட்டம் நடைபெற வுள்ளது. பிங்க் சந்துரு முகநூலில் ``ஒரு வருடம் திருவிழா நடக்காவிட்டால் என்ன?அழகர் ஆற்றில் ஒரு வருடம் இறங்கா விட்டால் மதுரை ஒன்றும் அழிந்துவிடாது’’ என்று வெங்கடேசன் சொல்லாத விஷயத்தை சொன்னதாக அவதூறாக பதிவேற்றம் செய்திருக்கிறார். பிங்க் சந்துரு வின் இந்த உண்மைக்கு மாறான பதிவேற்றத் திற்கு எதிராக அவர் மீது பிரிவு 171 ஜியின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.மதுரை மாநகரில் கலாச்சாரம், பண்பாடு, வேலையின்மை, விவசாயம் உள்ளிட்ட பல பிரச்சனைகளில் பாஜக - அதிமுக கூட்டு சேர்ந்து கடந்த 5 ஆண்டுகளில் செய்துள்ள மக்கள் விரோத, ஜனநாயக விரோத கொடுமைகளை மதுரை நாடாளுமன்றத் தொகுதி மக்களிடையே வலுவான பிரச்சாரத்தை திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி கொண்டு சென்றுள்ளது. அதற்கு பதிலளிக்க திராணியற்ற அதிமுக - பாஜக கூடாரங்கள் தனிநபர் தாக்குதல்களிலும், அவதூறு பிரச்சாரங்களிலும் ஈடுபட்டுள்ளனர்.