tamilnadu

இணைய வழியில் இறுதி பருவத்தேர்வு

மதுரை:
மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி இயக்கக தேர்வுமுறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க கோரும் விசாரணைக்குழு பரிந்துரைக்கு பல்கலைக்கழக ஆட்சிக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி இயக்ககத்தின் சார்பில் கேரள மையங்களில் நடைபெற்ற தேர்வில் 700 க்கும் மேற்பட்டோர் முறைகேடு செய்திருப்பதும் இதில் ரூ.3கோடிக்கும் மேல் பணம் கைமாறியிருப்பதும் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து முறைகேட்டில் தொடர்புடையவர்களிடம் விசாரணை நடத்திய குழுவினர் முறைகேட்டில் பலருக்கு தொடர்பிருப்பதால் சிபிஐவிசாரணை கோரலாம் என பரிந்துரைத்தனர். விசாரணைக்குழுவின் பரிந்துரை தமிழக ஆளுநருக்கும், உயர்கல்வித்துறைக் கும் அனுப்பி வைக்கப்பட்டது. 

இந்த நிலையில் பல்கலைக்கழக ஆட்சிக் குழுக்கூட்டம் நடைபெற்றது. துணைவேந்தர் மு.கிருஷ்ணன், பதிவாளர் (பொறுப்பு) வி.எஸ்.வசந்தா, ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதில் தேர்வு முறைகேடு, மறுமதிப்பீடு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை கோருவது அதற்கு வாய்ப்பில்லாத பட்சத்தில் லஞ்ச ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணைக்குஒப்படைப்பது என்ற விசாரணைக்குழுவின் பரிந்துரையை பல்கலைக்கழக ஆட்சிக் குழு ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளித்துள் ளது.