புதுதில்லி, டிச. 5- விவசாயிகளுக்கு எதிரான சட்டங் கள் ரத்து செய்யப்பட்டதைத் தொட ர்ந்து விவசாயிகளின் இதர கோரிக்கை களையும் ஏற்பதாக ஒன்றிய அரசு தெரி வித்துள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷா வெள்ளியன்று (டிச.3) இரவு பாரதிய கிசான் யூனியன் தலைவர் யது வீர் சிங் மூலம் சம்யுக்த கிசான் மோர்ச்சா தலைவர்களை அணுகி விவாதம் நடத்த தயாராக இருப்பதை தெரிவித்துள்ளார். கிசான் மோர்ச்சா அமைக்கும் துணைக் குழுவுடன் விவா திக்க தயார் என அமித் ஷா தெரி வித்ததாக யதுவீர் சிங் செய்தியாளர் களிடம் கூறினார். இதன் மூலம் விவ சாயிகளின் போராட்டத்தின் முன்பு அரசாங்கம் முழுமையாக சரணடை கிறது. சிங்குவில் நடந்த சம்யுக்த கிசான் மோர்ச்சா கூட்டத்தில், அகில இந்திய விவசாயிகள் சங்க தலைவர் டாக்டர்.அசோக் தவாலே மற்றும் பல்பீர் சிங் ரஜேவால், குர்னாம் சிங் சதுனி, ஷிவ்குமார் காக்கா மற்றும் யதுவீர் சிங் ஆகியோர் அடங்கிய ஐந்து பேர் கொண்ட துணைக்குழு அமைக்கப் பட்டுள்ளதாக கிசான் மோர்ச்சா செய்தித் தொடர்பாளர் செய்தியாளர் களிடம் தெரிவித்தார்.
இதனிடையே, அமித்ஷாவின் அறிவுறுத்தலின் பேரில், ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டாரும் கிசான் மோர்ச்சா பிரதி நிதிகளும் நடத்திய பேச்சுவார்த்தின் அடிப்படையில், விவசாயிகள் மீது அம்மாநில அரசு போட்டுள்ள 212 வழக்குகளை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டது. மற்ற மாநிலங்கள் விரைவில் முடிவு செய்யும். இது குறித்து ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட துணைக் குழு மாநில அள விலான குழுக்களுடனும் தொடர்பு கொள்ளும். தற்போது ஏற்பட்டுள்ள முன்னேற்ற த்தை மதிப்பீடு செய்யவும், தில்லி எல்லைப் போராட்டம் குறித்து முடி வெடுக்கவும் செவ்வாயன்று (டிச.7) மீண்டும் சம்யுக்த கிசான் மோர்ச்சா கூடு கிறது. மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற முக்கிய கோரிக்கை ஏற்கனவே நிறைவேற்றப் பட்டது.
நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட வாபஸ் மசோதாவுக்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித் தார். குறைந்தபட்ச ஆதரவு விலை யை சட்டப்பூர்வமாக்க வேண்டும். மின் துறை தனியார்மயமாக்கல் மசோதா வை திரும்பப் பெற வேண்டும். மாநி லங்களில் விவசாயிகள் மற்றும் போராட்டத்திற்கு ஆதரவளித்தோர் மீதான பொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும், போராட்டத்தின் போது உயிரிழந்த 708 விவசாயிகளின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், அவர்களுக்கு நினைவிடம் கட்ட நிலம் ஒதுக்க வேண்டும், அஜய் மிஸ்ராவை ஒன்றிய அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும், என்பதே மீதமுள்ள கோரி க்கைகள் என சம்யுக்த கிசான் மோர்ச்சா தலைவர்கள் தெரிவித்தனர்.