முதல்வரைச் சந்தித்த விவசாயிகள் சங்கத் தலைவர்கள்
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில், மடங்களுக்கு சொந்தமான நிலங்களை பயன்படுத்துவோர் கோரிக்கைகளை பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும் என தமிழக முதலமைச்சரை, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ. சண்முகம், பொதுச்செயலாளர் சாமி. நடராஜன் மற்றும் அடிமனை பயனாளிகள் சங்க மாநில நிர்வாகிகள் வ. செல்வம், எஸ். துரைராஜ், எஸ். குணசேகரன் ஆகியோர் நேரில் சந்தித்து மனு அளித்து முறையிட்டனர். அறநிலையத்துறை அமைச்சரும் உடனிருந்தார். கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்று முதலமைச்சர் கூறினார்