அம்பானிக்கு செக் வைத்த போலி சமூக ஊடகம்
ஸ்டார் குழுமத்தின் ஓடிடி பிரிவான டிஸ்னி ஹாட் ஸ்டாருடன் தொழில்நுட்பம் மற்றும் சந்தா ரீதியாக போட்டி போட முடியாமல் திணறிய அம்பானி, ஹாட் ஸ்டாரின் முக்கிய பங்கு களை விலைக்கு வாங்கினார். அதாவது ஹாட் ஸ்டாரை, ஜியோ சினிமா உடன் இணைத்து ஜியோ ஹாட் ஸ்டார் என மாற்றி தன் வசப்படுத்தினார். தனக்கு எதி ரான போட்டி நிறுவனத்தை வாங்கி விட்டோம்; இனி விளம்பர வருவாயில் கல்லா கட்டலாம் என நினைத்த அம்பானி க்கு டேப்மோட் (TAPMODE) என்ற போலி சமூக ஊடகம் செக் வைத்துள்ளது. ஜியோ ஹாட் ஸ்டாரில் ஒளிபரப் பப்பட்ட மினி உலகக்கோப்பை போட்டி களை சாப்ட் ஹேக் (எச்டி கேமரா படப் பிடிப்பு) மூலம் டேப்மோட் முகநூல் பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்தது. குறிப்பாக இந்தியா - நியூஸிலாந்து அணி கள் மோதிய இறுதிப் போட்டியை சுமார் 1 கோடிக்கும் அதிகமான பார்வையா ளர்கள் டேப்மோடில் (முகநூலில்) இல வசமாக கண்டு களித்தனர். டேப்மோட் மட்டுமின்றி 300க்கும் மேற்பட்ட போலி சமூக ஊடகங்கள் மினி உலகக்கோப்பை யை ஜியோ ஸ்டார் உதவியுடன் ஒளிபரப்பு செய்தன. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் ஜியோ ஸ்டாரின் சந்தா புதுப்பிப்பு எண் ணிக்கை மிக மோசமான அளவில் குறையும். சந்தா கணக்கு வைத்து இருப்ப வர்கள் கேமரா படப்பிடிப்பு மூலம் போலி சமூக ஊடகங்களில் ஒளிபரப்பு செய்து வருவதால் இதனை கட்டுப்படுத்த வாய்ப்பே இல்லை. அதனால் என்ன செய்வது என்று புரியாமல் அம்பானியின் ஜியோ ஹாட் ஸ்டார் விழித்து வருகிறது.
தினமும் 800 புஷ் அப்ஸ்
கிரிக்கெட் உலகில் ஒவ்வொரு அணியிலும் ஒரு முக்கியமான மற்றும் வித்தியாசமான வீரர் இருப்பார்கள். அவர்கள் கேப்டனுக்கு அடுத்து அணியின் தூண்களாக இருப் பார்கள். அந்த வீரர்கள் பேட்டிங், பந்து வீச்சு, துடிப்பான பீல்டிங் என மிக தைரி யமாக அனைத்து நேரங்களிலும் உதவுவார்கள். இந்தியாவில் ஹர்திக் பாண்டியா மற்றும் ஜடேஜா, இங்கிலாந்தில் பென் ஸ்டோக்ஸ், தென் ஆப்பிரிக்காவில் டேவிட் மில்லர், ஆஸ்திரேலியாவில் மேக்ஸ்வெல், நியூஸிலாந்தில் கிளென் பிலிப்ஸ் ஆகியோர் மிக தைரியமான, சுறுசுறுப்பான, துடிப்பான வீரர்கள் ஆவர். குறிப்பாக மேற்குறிப்பிட்ட வீரர் கள் அனைவரும் பீல்டிங்கில் இறக்கை யுடன் பறக்கும் பறவை போல காற் றோடு காற்றாக பாய்ந்து பந்தை பிடிப்பார்கள். பறக்கும் பிலிப்ஸ் இதில் நியூஸிலாந்தின் கிளென் பிலிப்ஸ் மிகவும் வித்தியாசமானவர் ஆவர். பேட்டிங், பந்துவீச்சை விட பறந்து கேட்ச் பிடிப்பதில் ஜான்டி ரோட்ஸை (முன்னாள் தென் ஆப்பி ரிக்க நட்சத்திரம்) மிஞ்சும் அளவிற்கு செயல்பட்டு வருகிறார். 8 அடிக்கும் மேல் உயரமாக, 4 அடிக்கு மேல் கிடை மட்டமாக, 6 அடிக்கு மேல் பின்னோக்கி என கேட்ச் பிடிப்பதில் பல்வேறு சாகசங்க ளை நிகழ்த்தி வருகிறார் பிலிப்ஸ். 3 நாட்களுக்கு முன் நிறைவுபெற்ற மினி உலககோப்பையின் இறுதி ஆட்டத்தில் கூட வித்தியாசமான முறையில் பாய்ந்து கேட்ச் பிடித்து இந்திய வீரர் கில்லை வெளியேற்றினார். தற்போ தைய சூழ்நிலையில் பிலிப்ஸுக்கு நாடுகளை கடந்து பிரம்மாண்ட ரசி கர்கள் கூட்டம் உருவாகியுள்ளது.
800 கடினமான பயிற்சி (ஜிம் ஹார்ட்) மேற்கொள்வதன் காரணமாகவே ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, பென் ஸ்டோக்ஸ், டேவிட் மில்லர், மேக்ஸ் வெல், கிளென் பிலிப்ஸ் போன்ற வீரர் கள் மிகவும் துடிப்பாகவும், தைரியமா கவும், பேட்டிங், பீல்டிங், பந்துவீச்சில் ருத்ரதாண்டவம் ஆடி வருகின்றனர். ஆனால் நியூஸிலாந்தின் கிளென் பிலிப்ஸ் மற்ற வீரர்களை சற்று மிக மிக கடினமான பயிற்சி மேற்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. நியூஸி லாந்து முன்னாள் வீரர் சிமோன் டவுல், “தினமும் 800 புஷ் அப்ஸ் எடுப்பதன் காரணமாகவே கிளென் பிலிப்ஸ் கேட்ச் பிடிப்பதில் வல்லவராக இருக்கி றார்” என ஒரு உண்மையை போட்டு டைத்துள்ளார். ஒருநாள் சராசரியாக 400 புஷ் அப்ஸ் போடுவது மிக சிரமம் ஆகும். ஆனால் பயிற்சிக்கு இடையே 800 புஷ் அப்ஸ் போட்டு, கிரிக்கெட் விளையாடி வருவது மிகுந்த ஆச்சரி யத்தை ஏற்படுத்தியுள்ளது. (எச்சரிக்கை : புஷ் அப்ஸ் மிக கடினமான உடற்பயிற்சி ஆகும். இந்த செய்தியை படித்து போதுமான உடல்வாகு மற்றும் தொடர்ச்சியான பயிற்சி மற்றும் ஜிம் அனுபவம் இல்லாதவர்கள் அதிகளவில் புஷ் அப்ஸ் எடுக்க முயற்சிக்க வேண்டாம். மாரடைப்பு ஏற்படும் அபாயம் உண்டு)