யுஜிசி-நெட் தேர்வுக்கு விண்ணப்பித்த மதுரை மாணவிக்கு தேர்வு மையம் ஒதுக்கீடு குளறுபடியை, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தலையீட்டில் சரி செய்யப்பட்டுள்ளது.
யுஜிசி-நெட் தேர்வுக்கு விண்ணப்பித்த மதுரையைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு நேற்று காலை தேர்வு எழுதும் நகரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்த கடிதத்தில் “மதுரை” என்றும், மாலையில் வந்த நுழைவுச்சீட்டில் தேர்வு மையம் கன்னியாகுமரி என்றும் மாற்றப்பட்டிருந்தது. மேலும், அதில் இருந்த கல்லூரியின் பெயரில் குமரி மாவட்டத்தில் எந்த கல்லூரியும் இல்லை. இந்நிலையில், இந்த பிரச்சனையை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனின் கவனத்திற்குக் கொண்ட வந்தனர்.
அவர் தலையீட்டில் இந்த பிரச்சனை சரி செய்யப்பட்டு, நேற்று இரவுக்குள் தேர்வு மையம் மதுரைக்கு மாற்றப்பட்டு மாணவிக்கு புதிய நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டது. மேலும், வேறுசில மாணவர்களுக்கும் இது போல் நடந்த குளறுபடிகளும் சரி செய்யப்பட்டன.