தொழிலாளர் சட்ட வரைவு விதிகளை வெளியிட்ட கர்நாடக அரசு உடனடியாக நிறுத்தி வைக்கக் கோரி மல்லிகார்ஜுன கார்கேவிற்கு எளமரம் கரீம் கடிதம்
புதுதில்லி ஒன்றிய மோடி அரசின் தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்துவதற்காக கர்நாடக அரசு வரைவு விதிகளை வெளி யிட்டுள்ள நிலையில், அதனை உடனடியாக நிறுத்தி வைக்கக் கோரி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிற்கு, இந்திய தொழிற் சங்க மையத்தின் (சிஐடியு) சார்பில் பொதுச் செய லாளர் எளமரம் கரீம் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பான கடிதத்தில்,”ஒன்றிய அரசின் மக்கள் விரோத மற்றும் தொழிலாளர் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக, சிஐடியு, ஐஎன்டியுசி (காங்கிரஸ் கட்சியின் தொழிற் சங்கம்) உள்ளிட்ட 10 மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்து வரும் பிப்ரவரி 12 அன்று அறி வித்துள்ள அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தின் பின்னணியில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். 4 தொழிலாளர் சட்டத் தொகுப்பு களைத் திரும்பப் பெற வேண்டும் என்பதே ஐக்கிய தொழிற்சங்க நடவடிக்கைக் குழுவின் முதன்மையான கோரிக்கையாகும். நாடு முழுவதும் இத்தகைய ஒற்றுமையான எதிர்ப்பு நிலவி வரும் சூழலில், காங்கிரஸ் ஆளும் கர்நா டக அரசு தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்பு களை அமல்படுத்துவதற்கான வரைவு விதி களை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு நாடு முழுவதும் உள்ள தொழிலாளர் வர்க்கத்தினர் மற்றும் தொழிற்சங்கங்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தி யுள்ளது. சீர்குலைக்க சதி கார்ப்பரேட் நலன்களுக்காக தொழிலாளர் உரிமைகளை காவு கொடுக்கும் ஒன்றிய பாஜக அரசின் கொள்கைகளால் இந்த பொது வேலைநிறுத்தம் அவசியமாகியுள்ளது. பல தசாப்த கால போராட்டங்களின் மூலம் தொழி லாளர் வர்க்கம் வென்றெடுத்த உரிமைகளைச் சிதைக்கும் நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும் என்பதே இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்தின் முக்கிய கோரிக்கையாகும். இந்தச் சட்டங்கள் கூட்டுப் பேரம் பேசும் உரிமையை நசுக்கி, வேலைப் பாதுகாப்பைக் குறைத்து, வேலை நிறுத்தம் செய்யும் உரிமையைப் பறிப்ப தோடு, தொழிலாளர்களின் அடிப்படைப் பாது காப்பு மற்றும் நலத்திட்டங்களையும் சீர் குலைக்கின்றன. கேரள அரசு காங்கிரஸ் உள்ளிட்ட ஒட்டுமொத்த எதிர்க் கட்சிகளும், நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பாஜக அரசின் இத்தகைய மக்கள் விரோதச் சட்டங்களைத் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன. குறிப்பாக, கேரளா போன்ற மாநிலங்கள் தொழிலாளர் உரிமை களுக்காக முன்னணியில் நின்று போராடி வருகின்றன. கேரள அரசு இந்தச் சட்டத் தொ குப்புகளைத் தனது மாநிலத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று திட்டவட்டமாக அறி வித்துள்ளது. இத்தகைய சூழலில், கர்நாடகா காங்கி ரஸ் அரசு இந்த ‘கொடூரமான’ தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்த முற்படுவது மிகவும் வருத்தமளிக்கிறது. சில பாஜக ஆளும் மாநிலங்களே இன்னும் விதிகளை உரு வாக்காத நிலையில், கர்நாடக அரசு வரைவு விதிகளை அறிவித்திருப்பது எதிர்க்கட்சிகளின் ஒருமித்த நிலைப்பாட்டிற்கு முரணானதாக இருக்கிறது. நம்பகத்தன்மைக்கு சோதனை கர்நாடக அரசின் இந்த நடவடிக்கை எதிர்க் கட்சிகளின் ஒற்றுமைக்கு எதிரானது மட்டு மல்லாமல், தொழிலாளர் வர்க்கத்திற்கு இழை க்கப்படும் துரோகமாகவும் பார்க்கப்படுகிறது. எனவே, தொழிலாளர்களின் நலன் கருதி, கர்நாடக அரசு இந்த வரைவு விதிகளை உடனடி யாகத் திரும்பப் பெறவோ அல்லது நிறுத்தி வைக்கவோ தாங்கள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இது வெறும் நிர்வாகம் சார்ந்த விஷயம் மட்டுமல்ல, இது எதிர்க்கட்சிகளின் அரசியல் உறுதிப் பாட்டிற்கும், நம்பகத்தன்மைக்கும் ஒரு சோதனையாகும். எனவே இந்த கடிதம் மூலமாக தாங்கள் எடுக்கும் அவசரத் திருத்த நடவடிக்கை, தொ ழிலாளர் வர்க்கத்தின் நம்பிக்கையை மீட்டெ டுக்கவும், மக்கள் விரோதச் சட்டங்களுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை வலுப்படுத்தவும் உதவும் என நம்புகிறோம். மேலும் தங்களின் உடனடி மற்றும் தீர்க்கமான தலையீட்டையும் எதிர்பார்க்கிறோம்” என அதில் கூறப்பட்டுள்ளது.
