tamilnadu

img

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்திற்கு எதிர்ப்பு

சென்னை, ஜூலை 6 - திறன்மிகு அளவி (ஸ்மார்ட் மீட்டர்) திட்டத் திற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாழனன்று (ஜூலை 6)  தமிழ்நாடு முழுவதும் பிரிவு  அலுவலகங்களில் மின் ஊழி யர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் சுமார் 3 கோடி மின் இணைப்புகள் உள்ளன. முதல் கட்டமாக  சென்னை தி. நகர் கோட்டத் தில் 1.42 லட்சம் ஸ்மார்ட்  மீட்டர்கள் பொருத்தப் பட்டன. புதிய மீட்டர்  கொள்முதல், பொருத்துதல்,  7 ஆண்டு பராமரிப்பு செலவு உள்ளிட்டவைகளை அரசே ஏற்றுக் கொண்டது. ஒன்றிய அரசின் நிர்ப்பந் தம் காரணமாக, தற்போது ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டம் தமிழ்நாட்டில் மூன்று கட்டங்களாக செயல் படுத்தப்படவுள்ளது. முதல்  இரண்டு கட்ட பகுதி களுக்கு ஒப்பந்தப் புள்ளி  மின்வாரியம் கோரியுள்ளது.  இதனால் பல கோடி ரூபாய்  மதிப்பில் பொருத்தப் பட்டுள்ள நல்ல நிலையில் உள்ள எலக்ட்ரானிக் ஸ்டே டிக் மீட்டர்கள் அகற்றப்பட உள்ளன. இதனால் பல ஆயி ரம் கோடி ரூபாய் வாரியத் திற்கு நட்டம் ஏற்படும். இந்த திறன்மிகு அளவி  திட்டம் செயல்படுத்தப் பட்டால், வாடிக்கையாளர் கள் மின் கட்டணத்தை முன்கூட்டியே (ப்ரீபெய்ட் முறை) செலுத்த வேண்டும். உச்சபட்ச மின் பயன்பாடு உள்ள நேரத்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். ஒரே தெருவில் பல தனி யார் நிறுவனங்கள் மின் வியாபாரத்தில் ஈடுபடும். மாநில அரசுகள் வழங்கும் மானியம் தானாகவே முடக்கப்படும். இத்தகைய மோசமான திறன்மிகு அளவி திட்டத்தை  கேரள அரசு கைவிட்டுள் ளது. மின் விநியோகத்தில் தனியாரை கொல்லைப் புறம் வழியாக அனுமதிக்க ஒன்றிய அரசு சூழ்ச்சி செய்கி றது. இதனை உணர்ந்து இத்திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என  வலியுறுத்தி இந்த போராட் டம் நடைபெற்றது.