சாத்தான்குளம் காவல்நிலையப் படுகொலை வழக்கு காவல்துறையினர் 9 பேருக்கும் இரட்டை மரண தண்டனை!
மதுரை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
மதுரை, ஏப். 6 - சாத்தான்குளம் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல் நிலையத்தில் அடித்துப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட போலீசார் 9 பேருக்கும் இரட்டை மரண தண்டனை விதித்து, மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவ்வழக்கில், இந்திய தண்டனைச் சட்டத்தின் 109 மற்றும் 34 ஆகிய பிரிவுகள் மற்றும் 342, 195, 211, 218 மற்றும் 302 ஆகிய பிரிவுகளின் கீழ், காவல்துறை அதிகாரிகள் 9 பேரும் குற்றவாளிகள் என ஏற்கெனவே நீதிமன்றம் அறிவித்திருந்தது. இந்நிலையில், 9 பேர்களுக்குமான தண்டனை விவரங்களை, திங்களன்று மாலை 5.30 மணியளவில், நீதிபதி ஜி. முத்துக்குமரன் தீர்ப்பை வாசித் தார். அதில், “சட்டம் ஒழுங்கைப் பரா மரிக்கக் கடமைப்பட்ட காவல்துறை அதிகாரிகளே, சட்டத்திற்கு எதிராகச் செயல்பட்டு, எந்தக் குற்ற வழக்கும் இல்லாத தந்தையையும் மகனையும் கொடூரமாகத் தாக்கி கொலை செய்த இந்த வழக்கு ஒரு அரிதான நிகழ்வு” என்று குறிப்பிட்டு, காவல்துறை யினர் 9 பேருக்கும் இரட்டை மரண தண்டனை விதித்தார். அத்துடன், உயிரிழந்தர்களின் குடும்பத்திற்கு காவல்துறை அதிகாரி கள் மொத்தமாக ரூ. 1.40 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உத்தர விட்டார். “காவல் நிலையத்தில் வைத்து தந்தை - மகன் இருவரும் காவல் சித்ர வதை செய்யப்பட்டு சாகடிக்கப் பட்டுள்ளனர். தந்தை முன் மகனையும், மகன் முன் தந்தையையும் அடைத்து வைத்து தாக்கியதை எளிதாக கருத முடியாது. இருவரும் நிராயுதபாணி யாக இருந்தபோதும், இரவு முழு வதும் காவல் நிலையத்தில் வைத்து தாக்கியுள்ளனர். இருவரும் வியாபாரி கள். சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருப்பவர்கள். அவர்கள் மீது எந்த குற்றவழக்கும் இல்லை என்றே தெரிகிறது. குற்றவாளிகளை சார்ந்து குடும்பம் உள்ளது என்பதால் தண்டனையை குறைக்க வேண்டுமென்பதை ஏற்க இயலாது. தண்டனை குற்றத்தின் தன்மையை பொறுத்தே தீர்மானிக் கப்பட வேண்டும். குற்றவாளிகள் அதி காரத்தை துஷ்பிரயோகம் செய்து ள்ளதால், கடுமையான குற்றமாகவே கருத வேண்டும். குற்றவாளிகள் நல்ல அறிவு வளர்ச்சி உள்ளவர்கள்; படித்த வர்கள். இதை சாதாரண குற்றமாக கருத முடியாது. பொதுமக்கள் பணத்தில் அரசு ஊதியம் பெற்றவர்கள், பொருளாதார அழுத்தத்தையோ, மன அழுத்தத்தையோ காரணமாக கூற இயலாது. சட்டத்தை காக்க வேண்டி யவர்களே குற்ற செயலில் ஈடுபட்டுள் ளார்கள். வேலியே பயிரை மேய்ந்தது போல அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர். தந்தை, மகன் இருவர் மீதும் பொய் வழக்கு போடப் பட்டுள்ளது என்பது நிரூபணம் ஆகி யுள்ளது. எங்கு அதிகாரம் உள்ளதோ, அங்கு பொறுப்பு அதிகமாக இருக்க வேண்டும். சட்ட திட்டங்களை காற்றில் பறக்கவிட்டு காவல்துறையினர் செயல்பட்டுள்ளனர். இரக்கமின்றி அடித்ததை கொடூரமாகவே பார்க்க வேண்டும். ஒரே நேரத்தில் தந்தை, மகன் என ஒரு குடும்பத்தின் ஆணிவேர் பிடுங்கப்பட்டுள்ளது. சாதாரண நபர்கள் குற்ற செயல்களில் ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு சாதாரண தண்டனை வழங்கப்பட வேண்டும். ஆனால் சட்டத்தை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினரே இதில் குற்ற செயல்களை செய்துள்ளனர். காவல் நிலையங்களில் ஏற்படும் மரணங் களில் நேரடி சாட்சிகள் அரிதிலும் அரிதாகத்தான் இருக்கும். அந்த வகை யில் இந்த வழக்கில் நேரடி சாட்சியம் உள்ளது. குற்றவாளிகளுக்கு பொரு ளாதார ரீதியாகவும் கடுமையான தண்டனை வழங்கினால் தான் இது போன்ற குற்றங்கள் நடைபெறுவதை தடுக்க முடியும். வழக்கில் கைது செய்யப்பட்ட 9 போலீசாருக்கும் மரண தண்ட னை விதிப்பதே சிறந்தது. இது போன்ற வழக்குகளில் ஆயுள் தண்ட னை வழங்கினால், இப்படி செயல்படும் போலீசாருக்கு அச்சம் ஏற்படாது. எனவே இந்த வழக்கில் குற்ற வாளிகளாக அறிவிக்கப்பட்ட காவல் ஆய்வாளர் எஸ். ஸ்ரீதர், உதவி ஆய்வா ளர்கள் பி. ரகு கணேஷ் மற்றும் கே.பாலகிருஷ்ணன், தலைமைக் காவ லர்கள் எஸ். முருகன் மற்றும் ஏ. சாமிதுரை, மற்றும் காவலர்கள் எம். முத்துராஜ், எஸ். செல்லதுரை, எக்ஸ். தாமஸ் பிரான்சிஸ், எஸ். வேலுமுத்து ஆகிய 9 பேருக்கும் மரண தண்டனை விதிப்பதாக நீதிபதி தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் தொடர்புடைய சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, கொரோனா தொற்று காரணமாக ஏற்கெனவே இறந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
