மாவட்ட ஆட்சித் தலைவர் பாராட்டு
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட ரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜித் சிங் காலோன் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறையின் மூலம் ஆட்சிமொழி திட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்துறை அலுவலருக்கு கேடயம் வழங்கி பாராட்டினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கோவிந்தராஜலு உள்ளார்.
சாலை ஓரமாக உள்ள கடைகளில் சட்டவிரோதமாக குத்தகை வசூல் இராமநாதபுரம்,
மார்ச் 11- இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சி யில் சாலை ஓரமாக இருக்கக்கூடிய கடைகளில் வசூ லில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்ப டையில் 2025- 2026 வழங்கப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்த பிறகும் அந்த குத்தகைதாரர் மீண்டும் வசூல் செய்வ தாக பொதுமக்கள் குற்றச்சாட்டினர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், விரைவில் அந்த ஒப்பந்தம் நடத்த வழிவகை செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.