tamilnadu

தூத்துக்குடி-கொழும்பு இடையே தினமும் தோணி போக்குவரத்து கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் அனுமதி

தூத்துக்குடி-கொழும்பு இடையே தினமும் தோணி போக்குவரத்து  கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் அனுமதி

தூத்துக்குடி, மே 21-  தூத்துக்குடி-கொழும்பு இடையே தினமும் தோணி போக்குவரத்துக்கு ஒன்றிய கப்பல் போக்குவரத்து இயக்கு நரகம் அனுமதி அளித்துள்ளது. தூத்துக்குடியில் இருந்து இலங்கை, மாலத்தீவு, லட்சத் தீவுக்கு காய்கறிகள், கட்டுமானப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தோணி மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு  வருகின்றன. இலங்கையில் இருந்து பழைய இரும்பு பொருட்கள், பழைய  காகிதங்கள் கொண்டு வரப்படு கின்றன. பொதுவாக தோணி போக்குவரத்து கடல் சீதோஷ்ண நிலையை கருத்தில் கொண்டு இயக்கப்படுகிறது. மே மாதம் 1-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை கடலில்  கடினமான கால நிலை காணப்படுவதால் தோணி இயக்கப்படு வது இல்லை. செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் ஏப்ரல் 30-ஆம்  தேதி வரை சுமூகமான காலநிலை நிலவுவதால் தோணி போக்குவரத்து நடைபெறும். இந்த நிலையில் தூத்துக்குடி தோணி உரிமையாளர் சங்கத்தினர், கப்பல் போக்குவரத்துத்துறை இயக்குநரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அதில், தோணிகளில் தற்போது அதிநவீன பாதுகாப்பு சாதனங்கள், தகவல்  தொடர்பு சாதனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதே  போன்று காலநிலையால் எந்தவித அசம்பாவித சம்பவங்க ளும் கடந்த சில ஆண்டுகளாக நடைபெறவில்லை. ஆகையால் தூத்துக்குடி-கொழும்பு, தூத்துக்குடி-மாலி  இடையே ஆண்டு முழுவதும் (தினமும்) தோணி போக்கு வரத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை  விடுத்திருந்தனர். இதனை பரிசீலித்த ஒன்றிய கப்பல் போக்கு வரத்து இயக்குநரகம் உரிய நிபந்தனைகளுடன் அனைத்து பருவ காலங்களிலும் தோணி போக்குவரத்துக்கு அனுமதி அளித்துள்ளது. அதன்படி தூத்துக்குடி-கொழும்பு இடையேயான தோணி  போக்குவரத்து ஆண்டு முழுவதும் அனைத்து பருவகாலங் களிலும் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டு உள்ளது. அதே  போன்று தூத்துக்குடி-மாலி இடையேயான தோணி போக்கு வரத்து ஏப்ரல் 30-ஆம் தேதியுடன் நிறுத்தப்பட்டது. இதனை  மீண்டும் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தோணி தொழில் புத்துயிர் பெறும் என்று தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.