இளைஞரை சுட்டுக் கொன்றுவிட்டு நாடகமாடும் தருமபுரி வனத்துறையினர்
சிபிஎம் உண்மை கண்டறியும் குழு குற்றச்சாட்டு
தருமபுரி, ஏப். 17- தருமபுரி மாவட்டம் பென்னா கரம் வட்டத்தில் கை விலங்கிட்டு அழைத்துச் சென்ற இளைஞரை வனத்துறையினர் சுட்டுக் கொன்றுவிட்டு, அவர் தப்பி யோடி தற்கொலை செய்ததாக நாடகமாடுகிறது என குற்றச் சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி, வனத்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரி யுள்ளது.
என்ன நடந்தது? நில வெளியேற்ற முயற்சி யும், இளைஞர்கள் கைதும்
மார்ச் 16, 2025: தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் அஞ்சல் நத்தம் வருவாய் கிரா மத்திற்குட்பட்ட கொங்கரப்பட்டி கிராமத்துக்கு வனத்துறை அதி காரிகள்வந்து “வீடுகளையும் விவசாய நிலங்களையும் விட்டு வெளியேற வேண்டும்” என்று நோட்டீஸ் வழங்கினார்கள். மறு நாள் பென்னாகரம் வனச்சரக அலுவலகத்தில் ஆஜராகுமாறு கூறினார்கள். மார்ச் 17, 2025 : கிராமத்தைச் சேர்ந்த 27 விவசாயிகள் வனச் சரக அலுவலகத்தில் ஆஜரா னார்கள். அவர்களை அங்கேயே தடுத்து வைத்துக்கொண்டு, கிரா மத்தில் இருந்து இளைஞர்க ளையும் வரவழைக்கச் சொல்லி நிர்பந்தித்தனர். இதையடுத்து 10 இளைஞர்கள் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களை ஓர் அறையில் அடைத்து வைத்த வனத்துறையினர், யானை சுட்டுக் கொல்லப்பட்டதற்கு ஒப்புக்கொள்ளுமாறு மிரட்டி யுள்ளனர்.
செந்தில் அழைத்துச் செல்லப்பட்ட நாள்
மார்ச் 18, 2025 : அந்த இளை ஞர்களில் கோவிந்தராஜ் மகன் 27 வயது கட்டிட தொழிலாளி செந்திலை வனத்துறையினர் கைவிலங்கிட்டு, முகத்தை துணி யால் மூடி, சுமார் 40 பேர் மூன்று பரிசல்களில் காவிரி ஆற்றின் வழி யாக கொங்கரப்பட்டி கிராமத்தி ற்கு அழைத்து வந்தனர். வனத்துறையினர் செந்தி லின் வீட்டு முன்பாக, செந்திலை நிறுத்தி, அவரது கைவிலங்கை அகற்றி, முகமூடியை விலக்கி, ஒரு நாட்டுத் துப்பாக்கி கொடு த்து வானத்தை நோக்கி சுடுமாறு கூறினர். செந்தில் வானத்தை நோக்கி சுட்டார் என அவரது அண்ணன் மனைவி ஜனனி மற்றும் பாட்டி கண்ணால் பார்த்தனர். பிறகு செந்திலுக்கு மீண்டும் கைவிலங்கிட்டு, முகத்தை மூடி வனத்துறையினர் அவரை வனப் பகுதிக்குள் அழைத்துச் சென்ற னர். “ஏன் அழைத்துச் செல்கிறீர் கள்?” என்று உறவினர்கள் கேட்ட போது, “யானை கொல்லப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்” என்று பதில ளித்தனர். யாரும் உடன் வரக் கூடாது என்று கூறி விரட்டினர்.
துப்பாக்கி சத்தமும் வனத்துறையினர் வெளியேறலும்
வனப்பகுதிக்குள் சென்ற சிறிது நேரத்திற்குள் ஒரு துப்பாக்கி வெடி சத்தம் கேட்டது. பின்னர் வனத்துறையினர் பலர் பகுதிகளாக வெளியேறினர். முதலில் 15 பேர், பிறகு 10 பேர், இறுதியாக மாலை 6 மணியள வில் 5 பேர் வெளியேறினர். கடை சியாக வெளியேறிய குழு, “செந்தில் கைவிலங்குடன் தப்பி ஓடி விட்டார்” என்று தெரிவித்தனர். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த செந்திலின் மனைவி சித்ரா மற்றும் உறவினர்கள், “40 பேர் கைவிலங்கிட்டு அழை த்துச் சென்றவர் எப்படி தப்பிக்க முடியும்?” என்று கேள்வி எழுப் பினர். வனத்துறையினர் “அவன் பள்ளத்தில் குதித்து காட்டில் தப்பி ஓடிவிட்டான்” என்று கூறினர்.
உடல் கண்டெடுப்பும் சந்தேகமும்
ஏப்ரல் 4, 2025 : வனப்பகுதி யில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. செந்திலின் அண்ணன் மயில் சாமியை அடையாளம் காண அழைத்துச் சென்றனர். சட லத்தின் மீது நாட்டுத் துப்பாக்கி வைக்கப்பட்டிருந்தது. வனத் துறையினர் செந்தில் தப்பி ஓடி, துப்பாக்கியால் தற்கொலை செய்ததாகக் கூறினர். ஆனால் மயில்சாமி, “துப்பா க்கியால் சுட்டு தற்கொலை செய் திருந்தால் ரத்தம் மற்றும் உடல் பாகங்கள் சிதறி அப்பகுதியில் தடயம் இருக்கும். ஆனால் இது சுட்டுக்கொலை செய்து விட்டு, தலையை சிதைத்து, உடலை அழுகவிட்டு, தற்கொலை செய்ததாக நம்பவைக்க வனத் துறையினர் நடத்தும் நாடகம்” என்று குற்றம் சாட்டினார்.
மனைவியின் புகாரும் நீதிமன்ற உத்தரவும்
இந்நிலையில், செந்திலின் மனைவி சித்ரா, தமிழ்நாடு காவல்துறை, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநில மனித உரிமை ஆணையர் ஆகியோருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்துள்ளார். இதையடுத்து, உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சிபிசிஐடி விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விசாரணையும் கோரிக்கைகளும்
இந்த சம்பவத்தை விசா ரிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு குழுவை அமைத்தது. மாவட்டச் செயலாளர் இரா.சிசு பாலன், மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் வி.மாதன், வே.விசுவநாதன், பென்னாகரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆ.ஜீவானந்தம், ஏரியூர் ஒன்றிய செயலாளர் எம்.தங்கராஜ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆர்.சின்ன சாமி, என்.பி.முருகன் ஆகியோர் அடங்கிய குழு ஏப்ரல் 13 அன்று கொங்கரப்பட்டி கிராமத்திற்கு சென்று, செந்திலின் மனைவி, தாயார், அண்ணன் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பின்வரும் கோரிக்கை களை முன்வைத்துள்ளது: 1.வனத்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் 2.கணவனை இழந்து இரண்டு குழந்தைகளுடன் தவிக்கும் சித்ராவுக்கு ரூ.50 லட்சம் நிவா ரணம் வழங்க வேண்டும் 3.சித்ராவுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் 4. கொங்கரப்பட்டி கிராமத்தில் உள்ள அவர்களது சாகுபடி நிலத்திற்கும் வீட்டுக்கும் பட்டா வழங்க வேண்டும் 5.வனப்பகுதியில் நூறாண்டுக ளாக குடியிருந்து வரும் விவ சாயிகளை வெளியேற்றும் வனத்துறையின் நடவ டிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் செந்தில் படுகொலை செய் யப்பட்ட நிலையில், 5 வயது மகள், 2 வயது மகனுடன் சித்ரா ஆதரவின்றி நிர்கதியாக உள்ள தாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உண்மை அறியும் குழு தெரிவித்துள்ளது.