இராமேஸ்வரம்:
பக்தர்கள் தரிசனம் செய்வதற்கும், கோவிலில் உள்ள 22 தீர்த்தக் கிணறுகளில் நீராடவும் மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளதால், இராமேஸ்வரம் இராமநாதசாமி கோவில் வெறிச்சோடி காணப்பட்டது.
தமிழகம் முழுவதும் கொரோனா 2 ஆவது அலை பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதுபோல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என்றும் அரசு அறிவித்துள்ளது.இந்த உத்தரவு திங்களன்று முதல் நடைமுறைக்கு வந்ததை தொடர்ந்து, இராமேஸ்வரம் இராமநாதசாமி கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட வில்லை. அதுபோல் கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில்நீராடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், பக்தர்கள்இல்லாமல் கோவிலின் உட்பகுதி முழுவதும் வெறிச்சோடியேகாணப்பட்டது.