புதுதில்லி, ஜூலை 5- தேசிய பழங்குடி யினர் ஆணையத் தலைவர் தனது பதவி யை ராஜினாமா செய்த தன் பின்னணியில், ஒன் றிய பாஜக அரசின் அழுத்தம் இருப்பதாக காங்கிரஸ் சந்தேகம் எழுப்பியுள்ளது. மோடி அரசு கொண்டு வந்துள்ள புதிய வனப்பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையிலேயே, தேசிய பழங் குடியினர் ஆணையத் தலைவரின் பதவி பறிக்கப்பட்டுள்ளதாகவும் அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. நாட்டில் பழங்குடியினர் நலனைப் பாது காப்பதற்காக தேசிய பழங்குடியினர் ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின் தலைவர் பதவியானது ஒன்றிய அமைச்சரின் அந்தஸ்திற்கு இணையானதாகும். குடியரசுத் தலைவ ராலேயே பழங்குடியினர் ஆணையத் தலை வர் நியமிக்கப்படுகிறார். அதன்படி கடந்த 2021 பிப்ரவரியில், பழங்குடியினர் ஆணையத்தின் தலைவ ராக 3 ஆண்டு காலத்துக்கு ஹர்ஷ் சவுகான் என்பவர் நியமிக்கப்பட்டார். அவரது பத விக்காலம் முடிவடைய இன்னும் 8 மாதங் கள் உள்ளன. இந்நிலையில், ஹர்ஷ் சவு கான் திடீரென தனது பதவியை ராஜி னாமா செய்துள்ளார். சவுகான் கடந்த ஜூன் 26 அன்று தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்த நிலையில், ஜூன் 27 அன்று- அதாவது மறுநாளே சவுகானின் ராஜினா மாவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. ஒன்றிய அரசின், வருடாந்திர பணித் திறன் மதிப்பீட்டை தொடர்ந்தே அவர் ராஜி னாமா செய்துள்ளார்; ஆணையத்தின் விசா ரணைகளை தலைவர்தான் தலைமை ஏற்று நடத்த வேண்டும்; ஆனால் ஹர்ஷ் சவு கானுக்கு உடல்நலப் பிரச்சனைகள் இருப்ப தால் 2 விசாரணைகளைத்தான் அவர் தனது தலைமையில் நடத்தினார்; ஆகவே அவ ராகவே தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார் என்று ஆணைய வட்டாரங்கள் கூறு கின்றன.
ஆனால், “புதிய வனப் பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு கடந்த 2022 செப்டம்பரில் ஹர்ஷ் சவுகான் கடிதம் எழுதியிருந்தார்; அதில் அவர் தெரி வித்திருந்த கருத்துகளை சுற்றுச்சூழல் அமைச்சகம் நிராகரித்து விட்டது; இந்நிலை யில்தான் ஹர்ஷ் சவுகான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்” என்று பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பழங்குடியினர் உரிமைகளை பறிப்ப தாக, மோடி அரசின் புதிய வனப் பாது காப்பு சட்டம் இருப்பதைக் குறிப்பிட்டு, ஹர்ஷ் சவுகான் எதிர்த்ததால்தான் அவர் ராஜினாமா செய்யும் நிலைக்கு ஒன்றிய அர சால் தள்ளப்பட்டுள்ளார் என காங்கிரஸ் கட்சி பகிரங்கமாகவே குற்றம் சாட்டி யுள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், டுவிட்டரில் கருத்து ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், “புதிய வனப் பாதுகாப்பு சட்டம் பழங்குடி யினரின் உரிமைகளைப் பாதிக்கும்’ என்று ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தை ஹர்ஷ் சவுகான் தைரி யமாக எதிர்த்தார். அதற்கான விலையை தற்போது அவர் கொடுத்திருக்கிறார். தேசிய பழங்குடியின ஆணைய தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யும் நிலைக்கு அவர் ஒன்றிய அரசால் தள்ளப் பட்டிருக்கிறார்” என்று குற்றம் சாட்டி யுள்ளார்.