விருதுநகர்:
பாஜக அரசு, கொரோனாவைக் காரணம் காட்டி அனைத்து பயணிகள் ரயில்களையும் ரத்து செய்துள்ளது. அதேநேரத்தில், விரைவுரயில்களை சிறப்பு ரயில்களாக அறிவித்து கொள்ளை லாபம் பார்த்து வருகிறது. பயணிகள் ரயில்கள் இயக்கப்படாததால், ஏழை- எளிய மக்கள் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் செலுத்தி பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், செங்கோட்டை-மதுரை,நெல்லை-மயிலாடுதுறை, பாலக்காடு-திருச்செந்தூர், மதுரை-புனலூர் பயணிகள் ரயில்களை உடனடியாக இயக்க வலியுறுத்திவிருதுநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர் செயலாளர் எல்.முருகன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச்செயற்குழு உறுப்பினர் ஜி.வேலுச்சாமி, மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாலசுப்பிரமணியன், மாவட்டக்குழு உறுப்பினர் பி.பாண்டி, நகர்க்குழு உறுப்பினர்கள் விஜயபாண்டி, ராஜேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.