tamilnadu

img

திரிபுரா உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது: மாணிக் சர்க்கார்

திரிபுரா உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரும் மோசடிகளை அரங்கேற்றி தனக்குத்தானே வெற்றியை அறிவித்துக் கொண்டது பாஜக. ஆனால் சமூக ஊடகங்களில் உலவும் கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்கள் சிலர், திரிபுராவில் பாஜகவுக்கு அடுத்து திரிணாமுல் காங்கிரஸ் பெரிய அளவிற்கு வாக்குகளைப் பெற்றுவிட்டதாகவும், இடதுமுன்னணி முற்றாகத் தோல்வி அடைந்து ஏதுமில்லாமல் நிர்க்கதியாகிவிட்டதாகவும் தங்களது உள்ளக்கிடக்கையை, உண்மைக்குப் புறம்பாக எழுதி வருகின்றனர். பாஜக மிகப்பெரும் மோசடிகளை அரங்கேற்றிய போதிலும், வாக்குச்சாவடிகளைப் பெருமளவிற்கு கைப்பற்றிய போதிலும் இடதுமுன்னணி வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளை பெற்றிருக்கிறார்கள் என்பது பதிவாகி இருக்கிறது. நியாயமான, நேர்மையான தேர்தல் நடத்தப்பட்டிருந்தால் நிச்சயம் நிலைமை பாஜகவுக்கு சாதகமாக இருந்திருக்காது என்பதையே கீழே உள்ள பட்டியல் புலப்படுத்துகிறது.

அகர்தலா, டிச. 1 - திரிபுராவில் நடந்து முடிந்துள்ள நகராட்சி தேர்தல்களில் மாநில பாஜக அரசால் முற்றிலும் மோசடிகள் அரங்கேற்றப்பட்டுள்ள நிலையில், இத்தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ள முடியாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.  திரிபுராவின் 20 நகராட்சி மன்றங் களுக்கும் நடைபெற்ற தேர்தலில் பெரும் மோசடிகள் அரங்கேற்றப் பட்டுள்ளன என்றும் எந்தவிதத்தி லும் நேர்மையாக தேர்தல் நடைபெற வில்லை என்றும் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் திரி புரா முன்னாள் முதலமைச்சருமான மாணிக் சர்க்கார் குற்றம்சாட்டியுள் ளார்.

இத்தேர்தலில் மாநில அரசே நேரடியாக நிர்வாகத்தையும், காவல்துறையையும், ஆளுங்கட்சி குண்டர்களையும் ஏவி வன்முறை யைக் கட்டவிழ்த்துவிட்டு மிகப் பெரும் மோசடிகளை அரங்கேற்றி யது என்றும் அவர் குற்றம்சாட்டி யுள்ளார்.

திரிபுராவில் அகர்தலா மாநக ராட்சி உட்பட 20 நகராட்சி மன்றங் கள் உள்ளன. இந்த நகர்ப்புற உள் ளாட்சி மன்றங்களுக்கான தேர்தல் நவம்பர் 25 அன்று நடைபெற் றது. இத்தேர்தலில் மிகப்பெரும் வன்முறையை ஏவி வாக்குச்சாவடி களைக் கைப்பற்றுவதற்கு ஆளும்  பாஜக திட்டமிட்டுள்ளது என்று தேர்தல் ஆணையத்திற்கு மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் தலைமையிலான இடதுமுன்ன ணியும் விரிவான புகார்களை அளித்திருந்த போதிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 

இந்த நிலையில் தேர்தலில் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்று வது, வாக்காளர்களை ஆயுதமுனை யில் மிரட்டி வாக்குச்சாவடிகளி லிருந்து வெளியேற்றுவது, இடது முன்னணி உள்ளிட்ட எதிர்க்கட்சி களின் வாக்குச்சாவடிகளை, முக வர்களை அடித்து கடும் தாக்குதல் நடத்தி வாக்குச்சாவடிகளை விட்டு  பலமாக வெளியேற்றுவது, வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றிக்கொண்டு கள்ளவாக்குகளைப் பதிவு செய்வது என அனைத்து மோசடிகளையும் அரங்கேற்றி உள்ளாட்சித் தேர்த லையே கேலிக்கூத்தாக்கி ஜனநா யகப் படுகொலை செய்தது பாஜக. 

20 நகர்மன்றங்களிலும் பாஜகவே வெற்றிபெற்றதாக கடந்த ஞாயிறன்று வாக்கு எண்ணிக்கை நடந்த பிறகு அறிவிக்கப்பட்டது. முன்னதாக 20 நகர்மன்றங்களிலும் மொத்தமுள்ள 334 வார்டுகளில் 112 வார்டுகளை போட்டியின்றி பாஜக கைப்பற்றிவிட்டதாகவும் அறிவிக்கப் பட்டது. உண்மையில் இந்த வார்டு களில் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் எவ ரும் வேட்புமனுதாக்கல் செய் வதற்கே அனுமதிக்கப்படவில்லை. மீறி தாக்கல் செய்த வேட்பாளர்கள் கடுமையான முறையில் தாக்குத லுக்கு உள்ளாக்கப்பட்டனர். வேட்பு மனுவைத் திரும்பப்பெறுமாறு பல வந்தமாக நிர்ப்பந்திக்கப்பட்டனர். அதையும் மீறி வேட்புமனு தாக்கல் செய்து, திரும்பப்பெறாத இடது முன்னணி வேட்பாளர்களின் மனுக்கள் பல இடங்களில் தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி நிரா கரிக்கப்பட்டன. இந்த வகை யிலேயே 112 வார்டுகளில் போட்டி யின்றி பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அகர்தலா மாநகராட்சியில் உள்ள மொத்தமுள்ள 51 வார்டு களிலும் பாஜக வேட்பாளர்களே வெற்றிபெற்றதாக அறிவிக்கப் பட்டது. எஞ்சியுள்ள 19 நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி மன்றங்களில் பெருவாரியான வார்டுகளில் பாஜக வேட்பாளர்களே வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் வாக்குச்சாவடிகளில் வன்முறை மூலமாக எதிர்க்கட்சி முகவர்களை வெளியேற்றிவிட்டு முற்றிலும் வாக்குச்சாவடிகளை தங்கள் வசப்படுத்திக் கொண்டு முழுக்க முழுக்க கள்ளவாக்குகளை பதிவு செய்து, வெற்றியை தனதாக்கிக் கொண்டது பாஜக என்பதுதான் திரிபுராவில் நடந்துள்ள உண்மை. 

தேசிய ஊடகங்களில் திரிபுரா உள்ளாட்சித் தேர்தல் ஜனநாயகப் படுகொலை ஒரு செய்தியாகக் கூட இடம்பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

இதுதொடர்பாக செய்தியாளர் களிடம் பேசிய மாணிக் சர்க்கார், “திரிபுரா உள்ளாட்சித் தேர்தல் ஒட்டு மொத்தமாகவே மோசடி செய்யப் பட்டுள்ளது. இதில் யார் முதலில் வந்தது, இரண்டாவதாக வந்தது, மூன்றாவதாக வந்தது என்று அறி விப்பதெல்லாம் எந்த மதிப்பும் இல்லாதது. வரலாறு காணாத தேர்தல் பயங்கரத்தை திரிபுரா உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் பாஜக அரங்கேற்றியுள்ளது. எதிர்க் கட்சித் தலைவர்கள், எதிர்க்கட்சி களின் வேட்பாளர்கள் மற்றும் ஊழி யர்கள் பாஜக குண்டர்களால் குறி வைத்து தாக்கப்பட்ட சம்பவம் ஏரா ளம் ஏராளம். தேர்தல் நடத்துவதற்கே பொருத்தமான சூழல் இல்லாத நிலைமை உருவாக்கப்பட்டது. நியாயமான, நேர்மையான தேர்தல் எந்தவிதத்திலும் இங்கே நடக்கவில்லை. தேர்தல் தினத்தன்று பாஜக குண்டர்கள் வாக்குச்சாவடி களை முற்றாகத் தங்கள் வசப் படுத்திக் கொண்டார்கள். பெண்  வேட்பாளர்கள், பெண் வாக்கா ளர்களைக் கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை. அனைவரையும் தாக்கினார்கள்” என்று சாடினார்.

திரிபுரா உள்ளாட்சித் தேர்தலில் பாஜக பிரம்மாண்ட வெற்றிப் பெற்று விட்டதாக பிரதமர் நரேந்திர மோடி புகழ்கிறார்; இது வெட்கக்கர மானது என்று கூறிய மாணிக் சர்க்கார், “திரிபுராவில் என்ன நடந்து கொண்டி ருக்கிறது என மோடிக்கு தெரியுமா எனத் தெரியவில்லை. இங்கு ஜன நாயகம் கொடுந்தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. உண்மையில் திரிபுரா மக்கள் பாஜகவின் கொடூர நடவடிக்கைகளுக்கும், மிக மோச மான நடவடிக்கைகளுக்கும் எதிராக கடும் கோபத்தில் இருக்கிறார்கள். அந்தக் கோபத்தை நேர் வழியில் - ஜனநாயக வழியில் எதிர்கொள்ள  முடியாததால்தான் வாக்குச்சாவடி களை கைப்பற்றி கள்ள வாக்கு களை பதிவு செய்து வெற்றியை தங்களுக்குத் தாங்களே அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்றும் சாடினார்.

திரிபுரா உள்ளாட்சித் தேர்தலை  நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்த போதிய பாதுகாப்பு ஏற்பாடு களை செய்ய வேண்டுமென்றும் உச்சநீதிமன்றம் அவசர ஆணை கள் பிறப்பித்த போதிலும் கூட, மாநில தேர்தல் ஆணையம் பாஜக குண்டர்களின் அட்டூழியங்களை யும், அத்துமீறல்களையும் அனு மதித்தது; கைகட்டி வேடிக்கைப் பார்த்தது என்றும் மாணிக் சர்க்கார் குற்றம்சாட்டினார்.

அகர்தலா மாநகராட்சி மற்றும் நான்கு இதர நகராட்சிகளுக்கு நடந்த தேர்தலை நிராகரித்து, முழுமையாக மறு தேர்தல் நடத்த வேண்டும் என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுமுன்னணியின்  கோரிக்கையை தேர்தல் ஆணை யம் ஏற்கவில்லை. எனவே அகர்தலா மாநகராட்சி உள்ளிட்ட 5 நகர்மன்ற வாக்கு எண்ணிக்கையை இடதுமுன்னணி புறக்கணித்தது.

கைலாஷ்கர், அம்பாசா, பனி சாகர் ஆகிய நகராட்சிகளில் 3 வார்டு களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றிபெற்றதாக அறிவிக்கப் பட்டது. மொத்தத்தில் இத்தேர்தலில் பாஜக 59சதவீதத்திற்கும் அதிக மான வாக்குகளைப் பெற்றிருப்ப தாகவும், இடதுமுன்னணி 19.65 சத வீதம் வாக்குகளைப் பெற்றிருப்ப தாகவும், திரிணாமுல் காங்கிரஸ் 16.39 சதவீத வாக்குகளைப் பெற்றி ருப்பதாகவும், காங்கிரஸ் 2.07 சத வீதம் வாக்குகளைப் பெற்றிருப்ப தாகவும் தேர்தல் ஆணையம் அறி வித்தது.